வாழைக்காய் பச்சடி செஞ்சுருக்கீங்களா? இதோ ரெசிபி... ட்ரை பண்ணிருங்க...

வாழைக்காய் பச்சடி

தயிர் பச்சடி, வெங்காய பச்சடி என பலவிதமான பச்சடி வகைகளை சாப்பிட்டுருப்போம். ஆனால் வாழைக்காய் பச்சடி எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்வோம் வாங்கா...

 • Share this:
  வாழைக்காயைச் சமைக்கும் போது மேல் தோலை மெல்லியதாகச் சீவியெடுத்தால் போதும். உள்தோலுடன் சமைப்பதே சிறந்தது. சிலர் இதுபோன்று சீவியெடுத்த தோலை நறுக்கி வதக்கி, புளி, மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். 

  தேவையான பொருட்கள்

  துவரம் பருப்பு - ஒரு கப்

  வாழைக்காய் - 2

  பெரிய வெங்காயம் - 2

  பச்சை மிளகாய் - 6

  மஞ்சள் தூள் - அரை சிறிய ஸ்பூன்

  கடுகு - ஒரு சிறிய ஸ்பூன்

  உளுந்து - ஒரு சிறிய ஸ்பூன்

  புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு

  தக்காளி - 2

  கறிவேப்பில்லை - தேவையான அளவு

  கொத்துமல்லி - தேவையான அளவு

  எண்ணெய் - 4 சிறிய ஸ்பூன்

  தண்ணீர் - தேவையான அளவு

  உப்பு - தேவையான அளவு  செய்முறை

  வாழைக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
  அத்துடன் வெங்காயம் , தக்காளி, பச்சை மிளகாய் ஆகிய இவற்றையும் கழுவி நன்றாகப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  கருவேப்பில்லை, கொத்துமல்லி ஆகிய இவைகளை ஆய்ந்து நன்கு கழுவிக் கொள்ளவும். பிறகு கூடியவரையில் தண்ணீர் இல்லாதபடி வடிய விட்டுக் கொள்ளவும். புளியை முன்னமே தண்ணீரில் ஊற வைத்து வடித்துக் கொள்ளவும்.

  மஞ்சள் தூளை சேர்த்து துவரம் பருப்பு, வாழைக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும் இதில் துவரம் பருப்பு குழையக் கூடாது. புளியைப் பச்சை வாசனை போகும் வரையில் நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு மேற்கண்டவற்றுடன் சேர்க்கவும்.

  மேலு ம் படிக்க..கேரளா ஸ்டைல் வாழை இலை மீன் வறுவல் ரெசிபி...

  பின்னர் எண்ணெய்யை காய வைத்துக் கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை, கொத்துமல்லி ஆகிய இவை அனைத்தையும் தாளித்து வேக வைத்த கலவையில் கொட்டவும்.
  இதோ இப்போது சுவையான வாழைக்காய் பச்சடி தயார்.

  மேலும் படிக்க...சிக்கன் லெக் பீஸ் தெரியும் மட்டன் லெக் பீஸ் தெரியுமா?
  Published by:Vaijayanthi S
  First published: