• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • இந்த ஒரே ஒரு டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க... பர்ஃபெக்டான இஞ்சி பூண்டு பேஸ்ட் ரெடி...

இந்த ஒரே ஒரு டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க... பர்ஃபெக்டான இஞ்சி பூண்டு பேஸ்ட் ரெடி...

உணவில் சேர்த்துக்கொள்ளும் இஞ்சி பூண்டு விழுது, உணவு செரிமானமாக உதவுகிறது. வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம், வாய்த்தொல்லைகள் போன்றவை வராமல் தடுக்கிறது. மேலும் ஒமட்டல், வாந்தி போன்றவை வராமல் பாதுகாக்கவும் உதவுகிறது.

  • Share this:
இஞ்சி, பூண்டு ஆகிய இரண்டும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்ட இஞ்சி, பூண்டு இரண்டுமே உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு மருந்தாக அமைகின்றன. இஞ்சி பூண்டு விழுதை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் பலவிதமான நன்மைகள் உண்டாகின்றன. அத்தகைய இந்த இஞ்சி, பூண்டு பேஸ்டை சுவையக செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க....

தேவையான பொருள்கள்

இஞ்சி - 100 கிராம்

பூண்டு - 125 கிராம்

செய்முறை 

இஞ்சியை நன்றாக கழுவி தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பின்னர் பூண்டை தோலுரித்து பொடிதாக நறுக்கி வைக்கவும். நறுக்கிய இஞ்சி, பூண்டு இரண்டையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு நன்றாக அரைக்கவும். இப்போது இஞ்சி பூண்டு பேஸ்ட் ரெடி. அரைத்த பேஸ்டை ஒரு பாட்டிலில் போட்டு பிரிஜ்ஜில் வைத்து உபயோகிக்கவும். இந்த இஞ்சி பூண்டு பேஸ்ட் குருமா, அசைவ குழம்பு, பிரியாணி வகைகளுக்கு உபயோகப்படுத்தலாம்.

குறிப்பு

1. இதில் நாம் கவனமாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இஞ்சியை விட பூண்டு கூடுதலாக இருக்க வேண்டும். அப்போதுதான் இஞ்சி பூண்டு பேஸ்ட் சுவையாகவும் பர்ஃபெக்டாகவும் இருக்கும். அதனால் நாம் செய்ய கூடிய உணவும் சுவை மிகுந்ததாக இருக்கும்.

2. நீங்கள் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு மாதம் அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை அரைத்து வைக்கும் பழக்கம் இருந்தால் அதில் கொஞ்சம் கல் உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். இதனால் கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் இருக்கும்.

மேலும் படிக்க... ருசியான பில்டர் காபி போட சில டிப்ஸ்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: