குளிருக்கு இதம் தரும் சுவையான ஆட்டுக்கால் சூப் வைப்பது எப்படி?

சளி இருமலை குணப்படுத்தும் ஆட்டுக்கால் சூப், உடம்புக்கு, எலும்புக்கு வலிமையை கொடுக்கிறது

குளிருக்கு இதம் தரும் சுவையான ஆட்டுக்கால் சூப் வைப்பது எப்படி?
ஆட்டுக்கால் சூப்
  • News18
  • Last Updated: January 5, 2019, 1:46 PM IST
  • Share this:
குளிர் காலத்தில் சூடாக ஏதாவது குடிக்கனும் போல இருக்கும்.  பருவநிலை மாறுதல் காரணமாக நம் அனைவரின் உடலிலும் சில மாறுதல்கள் மற்றும் நேய் தொற்று ஏற்படும்.

அதிலும் குளிர் காலத்தில் சளி தொல்லை, இருமல், தொண்டை கரகரப்பு என சில தொந்தரவுகள் ஏற்படும். அப்போது சூடாகவும் சத்து நிறைந்ததாகவும் ஏதேனும் அருந்தினால் தொண்டைக் குழிக்கு நன்றாக இருக்குமே என தோன்றும். அந்த சமயத்தில் இந்த
ஆட்டிக்கால் சூப்பை குடித்தால் ருசியாக இருக்கும். சளி தொண்டை கரகரப்புகளில் இருந்தும் விடுப்படலாம்.


ஆட்டுக்கால்


ஆட்டுக்கால் சூப் வைக்க தேவையான பொருள்கள்:
ஆட்டுக்கால் 4, இஞ்சி, பூண்டு, மிளகு தேவையான அளவு, சீரகம் கொஞ்சம், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் , மல்லித்தூள், மஞ்சள்தூள், பட்டை கிராம்பு சோம்பு தேவையான அளவு, உப்பு தேவையான அளவு, கொத்தமல்லி தழை ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.செய்முறை:

ஆட்டுக்காலை நன்றாக கழுவி சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும். அதன்பின் இஞ்சி, பூண்டை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

மிளகு சீரகத்தையும் பொடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்த்தும் பட்டை கிராம்பு சோம்பு, பொடித்து வைத்திருக்கும் மிளகு, சீரகம், தனியா இவைகளைப் போட வேண்டும். இவை பொறிந்த்தும்
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு அரைத்ததை சேர்த்து போட்டு வதக்க வேண்டும்.

அத்துடன் சுத்தம் செய்த ஆட்டுக்காலை குக்கரில் போட்டு 3-5 நிமிடம் வதக்க வேண்டும். பின்னர் மல்லித்தூள், மிளகாய்தூள் சிறிதளவு, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து  தேவைக்கும் அதிகமாகவே நீர் ஊற்றி குக்கரை மூடி வைக்க வேண்டும். 8-10 விசில் விட்டு குகரை இறக்க வேண்டும். அதன்பின் அதில் சிறிதளவு மல்லித்தழையை தூவினால் சுவையான ஆட்டுக்கால் சூப் ரெடி.

Also see... ருசியோ ருசி: காரைக்குடி சிக்கன் தெரக்கல்
First published: January 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்