ருசியான மாங்காய் புலாவ் செய்வது எப்படி?

கர்ப்ப காலத்தில் கர்பிணிகளுக்கு இந்த மாங்காய் சாதம் செய்து கொடுத்தால் விரும்பி உண்ணுவார்கள். அது மட்டுமல்லாமல் வாந்தி போன்ற உபாதைகள் வராமல் இந்த மாங்காய் புலாவ் தடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated: August 12, 2019, 10:07 PM IST
  • Share this:
புலாவ் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் மத்திய உணவாக உள்ளது. எப்போதும் வெஜிடெபிள் புலாவ், எக் புலாவ், தக்காளி புலாவ் என்றுதான் வழக்கமாக செய்து கொண்டிருக்கிறோம். சற்று வித்தியாசமாக மாங்காய் புலாவ் செய்வது குறித்து இந்த குறிப்பில் பார்க்கலாம். 

தேவையானவை:

வடித்த சாதம் – 1 கப்

மாங்காய்  - 1

கேரட் – 1

பச்சைப் பட்டாணி – கால் கப்வெங்காயம் - 1

பச்சை மிளகாய் – 1

முந்திரித் துண்டுகள் – சிறிது

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1 ஸ்பூன்,

பட்டை – சிறு துண்டு

ஏலக்காய் - 2

கிராம்பு – 1,

சோம்பு – 1 டீஸ்பூன்,

நல்லெண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

மாங்காய்

செய்முறை:

மாங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் கேரட், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெயை விட்டு  பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.

மேலும் படிக்க...சுவையான முருங்கைக்கீரை முட்டை பொரியல் செய்வது எப்படி?

இத்துடன் பச்சை பட்டாணி, பச்சை மிளகாய், பொடியாக சீவிய மாங்காய் மற்றும் காய்கறிகளைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பச்சை வாசனை போகும் வரை வதங்கியதும், வடித்த சாதத்தை சேர்த்து உப்பு போட்டு நன்றாக கிளற வேண்டும்.

மேலும் படிக்க... உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்கள்!

அதன் பிறகு மீதமுள்ள எண்ணெயை ஊற்றி முந்திரித் துண்டுகளை பொறித்து அத்துடன் கொத்தமல்லியையும் சேர்த்துக் கிளறி இறக்கினால் ரிசியான மாங்காய் புலாவ் ரெடி.

கர்ப்ப காலத்தில் கர்பிணிகளுக்கு இந்த மாங்காய் சாதம் செய்து கொடுத்தால் விரும்பி உண்ணுவார்கள். அது மட்டுமல்லாமல் வாந்தி போன்ற உபாதைகள் வராமல் இந்த மாங்காய் புலாவ் தடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading