முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சுவையான மீன் தொக்கு செய்வது எப்படி...?

சுவையான மீன் தொக்கு செய்வது எப்படி...?

மீன் தொக்கு

மீன் தொக்கு

பொதுவாக மீன் தொக்கு நெத்திலி மீனில் மட்டுமே செய்வார்கள். ஆனால் மீன் தொக்கை அனைத்து வகையான மினிலும் செய்து சாப்பிடலாம்...

  • Last Updated :

சூடான சாதத்தில் போட்டு சாப்பிட அருமையாக இருக்கும் இந்த நெத்திலி மீன் தொக்கு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...

தேவையான பொருட்கள்

முள்ளில்லாத மீன் துண்டுகள் – 10

தக்காளி - 4

காய்ந்த மிளகாய் - 3

கறிவேப்பிலை - சிறிதளவு

வெங்காயம் - 7

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்

ஜீரகத்தூள் - 1 ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

தனியா தூள் - 1 ஸ்பூன்

தயிர் - 1 கப்

கரம் மசாலா - 2 ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

மீன்

செய்முறை

முதலில் மீனை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். முள் இல்லாமல் இருந்தால் நல்லது. அதன் பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

மேலும் படிக்க..கேரளா ஸ்டைல் வாழை இலை மீன் வறுவல் ரெசிபி...

பின்னர் அத்துடன் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். இப்போது மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும். பின் சுத்தம் செய்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து மெதுவாக கிளற விடவும்.

பிறகு தயிரை சேர்த்து கிளறி விட வேண்டும். மசாலா மீனுடன் சேர்ந்து கெட்டியானதும் இறக்கி பரிமாறினால் சுவையான மீன் தொக்கு ரெடி.

top videos

    மேலும் படிக்க... குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை இடியாப்பம்...

    First published:

    Tags: Fish, Food