• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சுவையான கமகம எள்ளுப்பொடி செய்வது எப்படி?

சுவையான கமகம எள்ளுப்பொடி செய்வது எப்படி?

எள்ளுப்பொடி

எள்ளுப்பொடி

தினசரி ஒரு ஸ்பூன் எள்ளு விதைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் குடல் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்து குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும். எள்ளின் விதையை வெல்லப்பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிடலாம் அல்லது எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலநோயினை குணமாக்கும்.

  • Share this:
எள்ளில் 20 விழுக்காடு புரதமும், 50விழுக்காடு எண்ணெயும், 16 விழுக்காடு மாவு பொருட்களும் உள்ளன. ஆராய்ச்சி ஒன்றில் எள்ளு விதை மற்றும் நல்லெண்ணெய் சர்க்கரை நோயை தடுப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தினசரி ஒரு ஸ்பூன் எள்ளு விதைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் குடல் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்து குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும். எள்ளின் விதையை வெல்லப்பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிடலாம் அல்லது எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலநோயினை குணமாக்கும். அந்த வகையில் எள்ளு பொடியை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

எள் - 1/2 கப்

உளுந்து - 1/2 கப்

மிளகாய் வத்தல் - 15

பூண்டு பற்கள் - 10

புளி - சிறிய கோலி அளவு

பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி

எள்ளு


செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து ஒரு சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தலை  போட்டு வறுத்து தனியே வைக்கவும். பின் எள், உளுந்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியே வறுத்து கொள்ளவும். அதனைத் தொடர்ந்து புளி, பூண்டுப்பற்கள், பெருங்காயத்தூள் மூன்றையும் லேசாக வறுத்துக் கொள்ளவும். இறுதியில் கறிவேப்பிலையை லேசாக வறுத்து எல்லாவற்றையும் சிறிது நேரம் ஆறவிடவும்.

நன்கு ஆறியவுடன் எல்லாவற்றையும் போட்டு அதனுடன் உப்பும் சேர்த்து பொடித்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு  வைக்கவும். சுவையான எள்ளுப்பொடி ரெடி. இவை இட்லி தோசையுடனும், சுடு சாதத்துடனும் நெய் விட்டு சாப்பிடலாம்.

மேலும் படிக்க... தித்திக்கும் தேங்காய் அல்வா.. இதோ ரெசிபி..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: