ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

New year Recipe | புத்தாண்டிற்கு இப்படி பாயசம் செய்து கொடுங்கள்... சுவை அலாதியாக இருக்கும்...!

New year Recipe | புத்தாண்டிற்கு இப்படி பாயசம் செய்து கொடுங்கள்... சுவை அலாதியாக இருக்கும்...!

சக்கரைவள்ளிக் கிழங்கு பாயாசம்

சக்கரைவள்ளிக் கிழங்கு பாயாசம்

payasam | சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, பி, சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து, ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ், இரும்பு, கால்சியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொதுவாக கிழங்கில் கொழுப்பு அதிகம் நிறைந்து காணப்படும். ஆனால் சர்க்கரைவள்ளி கிழங்கில் கொழுப்பு மிகவும் குறைவு. மேலும் இதில் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது. இதில் இந்த புத்தாண்டிற்கு பாயாசம் செய்து பாருங்கள். அப்புறம் குழந்தைகள் இன்னும் இன்னும் என்று கேட்டு வாங்கி குடிப்பார்கள்.

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - 3 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 1

முந்திரி பருப்பு - 1டேபிள் ஸ்பூன்

பாதாம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

பால் - 3 கப்

ஏலக்காய் - 1 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை எடுத்து கொள்ளவும் அதில் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு குக்கரை எடுத்து அதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை பாதியாக வெட்டி வைக்கவும்.
அதில் தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும் வரை வேக வைக்கவும். வேக வைத்த கிழங்கின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பால் சேர்க்கவும். 5 நிமிடங்கள் பாலை நன்றாகக் கொதிக்க விட்டு அதில் ஜவ்வரிசி சேர்த்து நன்கு வெந்ததும் அதனுடன் சர்க்கரை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக கிளறி வேக வைக்கவும்.
பிறகு சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறவும் பிறகு குங்குமப் பூ, ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறவும்.
பின்னர் பாதாம் பருப்பை அதன் மேல் தூவி விடலாம். இப்போது சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாயசம் ரெடி.
First published:

Tags: Food, Sweet Potato, Sweet recipes