• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சுண்டைக்காய் குழம்பு செய்வது எப்படி?

சுண்டைக்காய் குழம்பு செய்வது எப்படி?

சுண்டைக்காய் குழம்பு

சுண்டைக்காய் குழம்பு

சுண்டைக்காய் குழம்பு என்பது பச்சை சுண்டைக்காயைக் கொண்டு செய்வது ஆகும். இது சுண்டைக்காய் புளிக்குழம்பு என்றும் அழைக்கப்படுகிறது.

  • Share this:
    சுண்டைக்காய் கார குழம்பு சூப்பராக இருக்கும். பச்சை சுண்டைக்காய் சின்ன வெங்காயம் வைத்து கார குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க....

    தேவையான பொருட்கள்:

    பச்சை சுண்டைக்காய்

    சின்ன வெங்காயம் - தலா ஒரு கப்

    தேங்காய் துண்டுகள் - 2

    பூண்டு - 2 பல்

    கீறிய பச்சை மிளகாய் - 1

    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

    குழம்பு பொடி - 2 டீஸ்பூன்

    புளி - நெல்லிக்காய் அளவு

    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிதளவு

    எண்ணெய்

    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    முதலில் பூண்டு, வெங்காயம், தேங்காயை பொடியாக நறுக்கவும். சுண்டைக்காயை காம்பு நீக்கி, கழுவி, மத்தால் லேசாக நசுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து வதக்கி, சுண்டைக்காயையும்  போட்டு நன்றாக வதக்கவும். இதில் மஞ்சள்தூள், உப்பு, குழம்பு பொடி போட்டு, புளியைக் கரைத்து ஊற்றி மிளகாய்த்தூள் காரத்திற்கு ஏற்ப போட்டுக்கொள்ளவும். அதப் பின்னர் சுண்டைக்காய் நன்றாக வேகும் வரை கொதிக்க வைத்து, கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுண்டகாய் குழம்பு ரெடி...

    மேலும் படிக்க...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: