உடலின் அனைத்து உறுப்புகளுக்கு ரத்தத்தை பாய்ச்சும் இதயத்தில் சிலருக்கு அடைப்பு ஏற்பட்டு இதய பாதிப்பு, இதயம் தற்காலிகமாக செயலிழப்பது போன்ற ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுகின்றன. கதிரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது. அத்தகைய காயில் ஸ்டஃப்டு கத்திரிக்காய் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க...
தேவையான பொருட்கள்
சிறிய கத்திரிக்காய் - கால் கிலோ
இட்லி மிளகாய் பொடி - 50 கிராம்
மிளகாய் தூள் - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 50 கிராம்
கடலை மாவு - 50 கிராம்
உப்பு தேவைக்கேற்ப
சமையல் எண்ணெய் - 100 கிராம்.
செய்முறை
முதலில் கத்திரிக்காயை நன்றாக கழுவிக் கொள்ளவும். அதன் பின்னர் காம்பை கொஞ்சம் விட்டு நான்காக அல்லது எட்டாகப் பிளந்து இருப்பது போல வெட்டிக் கொள்ளவும். இட்லி மிளகாய் பொடியில் கொஞ்சம் உப்பு சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு குழைக்கவும். இதை ஒவ்வொரு கத்தரிக்காயினுள்ளும் நன்றாக அடைக்கவும்.
மேலும் படிக்க... மசாலா தோசை தெரியும்... மசாலா சப்பாத்தி தெரியுமா?
கடலை மாவில் தேவையான அளவு மிளகாய் தூள், உப்பு சேர்த்துப் பேஸ்ட்டாகக் குழைக்கவும். அதை கத்தரிக்காயின் பிளந்த பாகங்கள் மூடும்படி தடவிவிடவும். எல்லா கத்திரிக்காய்களையும் இந்த முறையில் தயார் செய்துகொள்ளவும்.
மேலும் படிக்க... கருப்பட்டி இட்லி செய்வது எப்படி?
சற்றே அகலமான வாணலியை அடுப்பில் வைத்து சமையல் எண்ணெய் ஊற்றி, சூடானதும் ஸ்டஃப் செய்யப்பட்ட கத்திரிக்காய்களை பரவலாக போடவும். நான்கு நிமிடத்தில் திருப்பிப் போடவும். எல்லாபுறமும் திருப்பிப் போட்டு நன்கு வேகவிடவும், அடுப்பை சிம்மில் வைத்து எடுக்கவும். சுவை மிகுந்த ஸ்டஃப்டு கத்திரிக்காய் ரெடி...
மேலும் படிக்க... முருங்கைக்கீரை துவையல் செஞ்சுரூக்கீங்களா?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.