குழந்தைகளுக்கு பிடித்தமான மீல் மேக்கர்-65

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான மீல் மேக்கர் செய்வது எப்படி என்பதை பார்க்க்கலாம்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான மீல் மேக்கர் செய்வது எப்படி என்பதை பார்க்க்கலாம்.

 • Share this:
  அசைவம் பிடிக்காதவர்களுக்கு சிக்கன் 65 செய்வதை போல் மீல் மேக்கரில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அதனை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க...

  தேவையான பொருட்கள் :

  சோயா சங்க்ஸ் (மீல் மேக்கர்) - 50 கிராம் (25 பெரிய பீஸ்)
  கார்ன்ஃப்ளார் - 2 டேபிள்ஸ்பூன்


  அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்


  இஞ்சி-பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்


  தயிர் - 1 டேபிள்ஸ்பூன்


  மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்


  கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்


  உப்பு - தேவையான அளவு


  கறிவேப்பிலை - 2 இலைகள்

  எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

   

  மேலும் படிக்க... சமையலுக்கு தேவையான சில டிப்ஸ்...  மேலும் படிக்க... கருப்பு உளுந்து கஞ்சி செய்ய ரெசிபி...

  செய்முறை:

  மீல் மேக்கரை கொதிக்கும் வெந்நீரில் 15 நிமிடம் ஊறவைத்துப் பிழிந்தெடுத்து வைத்துக்கொள்ளவும். பெரியதாக இருந்தால், இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, இஞ்சி-பூண்டு பேஸ்ட், தயிர், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து அதில் மீல் மேக்கரை சேர்த்து நன்றாக கிளறி அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற விடவும்.

  மேலும் படிக்க... சூப்பரான ஈஸியான ஈவினிங் ஸ்நாக்ஸ்.. இதோ ரெசிபி..

  வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், பிரட்டி வைத்த மீல் மேக்கரை போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.அதே எண்ணெயில் கறிவேப்பிலையைப் பொரித்தெடுக்கவும். பொரித்த மீல் மேக்கர்-65 மேல் கறிவேப்பிலையைத் தூவி தக்காளி சாஸுடன் பரிமாறலாம்.

  மேலும் படிக்க... கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்... தட்டு வடை ரெசிபி...
  Published by:Vaijayanthi S
  First published: