• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்துமாவு கஞ்சி...

உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்துமாவு கஞ்சி...

சத்துமாவு கஞ்சி

சத்துமாவு கஞ்சி

சத்து மாவு கஞ்சி குழந்தைகளுக்கும், பெரியோர்களுக்கும் மிகவும் நல்லது.

  • Share this:
சத்து மாவு கஞ்சி குழந்தைகளுக்கும், பெரியோர்களுக்கும் மிகவும் நல்லது. இதனை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க...

தேவையான பொருட்கள்

கம்பு - 100 கிராம்

ராகி - 100 கிராம்

கோதுமை - 100 கிராம்

பச்சரிசி - 100 கிராம்

உளுந்து - 100 கிராம்

பாசிப்பயறு - 100 கிராம்

கொள்ளு - 100 கிராம்

வேர்க்கடலை - 100 கிராம்

முந்திரி - 100 கிராம்

பாதாம் - 100 கிராம்

ஏலக்காய் - 100 கிராம்

ஜவ்வரிசி - 100 கிராம்

மக்காச் சோளம் - 100 கிராம்

கொண்டக்கடலை - 100 கிராம்

பொட்டுக்கடலை - 100 கிராம்



மாவு தயாரிக்கும் முறை:

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் தனித்தனியாக ஒரு வாணலியில் நன்கு வறுக்கவும். வறுத்தவுடன் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்சியில் (அ) மாவு அரைக்கும் இடத்தில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும். மாவு ஆறிய உடன் மாவு சலிப்பானில் நன்கு சலித்து கொள்ளவும்.

சத்துமாவு கஞ்சி தயாரிக்க தேவையான பொருட்கள்

சத்துமாவு - 2 ஸ்பூன்

பால் - 2 டம்ளர்

தண்ணீர் - 2 டம்ளர்

சர்க்கரை - தேவைக்கு ஏற்ப

மேலும் படிக்க... மழை காலத்திற்கு ஏற்ற கற்பூரவள்ளி டீ செய்ய ரெசிபி...

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சத்துமாவையும் சேர்த்து கட்டி படாமல் நன்கு கரைக்கவும். கரைத்த இந்த கலவையை அடுப்பில் வைத்து கட்டியாகாமல் நன்கு கலக்கவும். சிறிது நேரத்தில் பாலை ஊற்றி நன்கு கலக்கி அதனுடன் சர்க்கரையையும் சேர்த்து கலக்கி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான, ஆரோக்கியமான சத்துமாவு கஞ்சி தயார்.

மேலும் படிக்க... சளி தொல்லையை போக்கும் தூதுவளை துவையல்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: