நாம் சாப்பிடும் போது என்னதான் கூட்டு, பொரியல், வறுவல் வைத்து சாப்பிட்டாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நம் அனைவருக்கும் மிகவும் பிடித்தது வடகம்தான். அந்த வடகத்தை எப்படி வீட்டில் செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1கப்
தண்ணீர் - 4 கப்
பச்சை மிளகாய் விழுது - காரத்திற்கு ஏற்ப
உப்பு - தேவைக்கு
வெள்ளை எள் - 1 டீ ஸ்பூன்
செய்முறை:
முதலில் வாணலியில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடவும். ஒரு பாத்திரத்தில், மாவுடன் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இதற்கு தண்ணீர் அளவு தேவையில்லை. அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, கரைத்த மாவை, கொதிக்கும் நீரில் ஊற்றி, கைவிடாமல் கிளறவும். கட்டி சேராமல் கிளறியதும், அடுப்பை முழு சூட்டில் வைக்கவும்.
மாவு வெந்து வரும் பொழுது, குமிழ்கள் தோன்றி தெறிக்கும். கவனமாக இருக்க வேண்டும். வெந்த மாவு சற்றே நிறம் மாறும். அப்பொழுது, கையை தண்ணீரில் நனைத்து மேலாக தொட்டு பார்க்கவும். விரலில் ஒட்டாமல் இருந்தால், பச்சை மிளகாய் விழுது, உப்பு, எள் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் நன்கு கிளறி விடவும்.
சூடு ஆறிய பின், சுத்தமான வெள்ளை துணியில், சிறு துண்டுகளாக வைத்து, ஆற விடவும். வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும். சுவையான அரிசி மாவு வடகம் ரெடி. அல்லது முருக்கு செய்யும் அச்சு இருந்தால் அவ்ற்றி மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நமக்கு பிடித்த வடிவத்தில் பிழிந்து விடலாம்.
மேலும் படிக்க... உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் காலை இந்த ஜூஸ் குடித்தால் நல்லது
இவை நன்கு உலர்ந்தவுடன் எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிட நன்றாக இருக்கும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.