குழந்தைகளுக்கு பிடித்த ரசமலாய்.. எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்..

குழந்தைகளுக்கு பிடித்த ரசமலாய்.. எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்..

ரசமலாய்

குழந்தைகளுக்கு ரசமலாய் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே எளிய முறையில் இதனை செய்யலாம்.

  • Share this:
    குழந்தைகளுக்கு ரசமலாய் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே எளிய முறையில் இதனை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    பால் - 3 லிட்டர்

    சர்க்கரை - 3 கப்

    தண்ணீர் - 4 கப்

    குங்குமப் பூ - சிறிது

    ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை

    எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

    பாதாம், முந்திரி, பிஸ்தா - 3 டேபிஸ் ஸ்பூன்

    செய்முறை : 

    பாதாம், பிஸ்தா, முந்திரி முதலியவற்றை சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ள வேண்டும். 1 லிட்டர் பாலைக் கொதிக்க வைத்து அரை லிட்டர் அளவுக்கு சுண்ட வைக்க  வேண்டும். அந்த பாலில் 1 கப் சர்க்கரை, குங்குமப் பூ, பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க விட வேண்டும். சர்க்கரை கரைந்ததும் 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட  வேண்டும்.

    மீதியுள்ள 2 லிட்டர் பாலை கொதிக்க வைத்து கொதிக்கும் போது எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். எலுமிச்சை சாறு கலந்தவுடன் பால் திரிந்து விடும். திரிந்த பாலை ஒரு காட்டன் துணியில் மூட்டை கட்டி தண்ணீர் வடியும் படி வைக்க  வேண்டும்.  தண்ணீர் எல்லாம் நன்றாக வடிந்த பின் அந்த மூட்டையில் உள்ள கலவையை ஒரு தட்டில் கொட்டி உள்ளங்கையால் மென்மையாக அழுத்தி பிசைய  வேண்டும்.

    அதன் பின்னர் அந்த மாவை சிறு சிறு வடை போல தட்டிக் கொள்ள  வேண்டும்.  அடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மீதியுள்ள 2 கப் சர்க்கரையை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும். கொதிக்கும் போது வடை போல் தட்டி வைத்திருக்கும் பன்னீரை சர்க்கரைப் பாகில் போட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும். அரை மணி நேரத்தில் போட்ட வடைகள் உப்பி, பெரிதாகி விடும்.

    மேலும் படிக்க...  கோடை வெயிலுக்கு ஏற்ற சுரைக்காய் தயிர் பச்சடி... ரெசிபி இதோ..

    இப்போது இந்த வடைகளை ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பாலில் போட வேண்டும். அத்துடன் சிறிதளவு குங்குமப்பூவைசேர்க்க வேண்டும். தேவைப்பட்டால் குளிர்ச்சிக்காக ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறலாம். இப்போது தித்திப்பான ரசமலாய் ரெடி.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: