ரமலான் நோன்புக் கஞ்சி செய்வது எப்படி?

நோன்பு கஞ்சி ருசியாக இருக்கும் என்பதாலேயே அது மிகப் பிரபலம்.

ரமலான் நோன்புக் கஞ்சி செய்வது எப்படி?
ரமலான் நோன்புக் கஞ்சி.
  • Share this:
ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் புனித மாதமாக கடைபிடிக்கும் ரமலான் நோன்பு ஆரம்பமாகிவிட்டது. வழக்கமாக இந்த சீசனில் தமிழகம் முழுவதிலும் உள்ள எல்லா பள்ளிவாசல்களிலும் ஒரு மாதத்துக்கு கஞ்சி தயாரிக்கப்படும். ’நோன்புக் கஞ்சி’ எனச் சொல்லப்படும் அதை பொதுமக்கள் அனைவருக்கும் விநியோகம் செய்வதோடு, பள்ளிவாசல்களில் நோன்பு துறக்கும் இஸ்லாமியர்கள் அதை அருந்துவார்கள். இம்முறை ஊரடங்கு காரணமாக இந்த வழக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

நோன்புக் கஞ்சி ருசியாக இருக்கும் என்பதாலேயே அது மிகப் பிரபலம். அதை எப்படி செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:


பச்சை அரிசி - 1 கப்
பாசி பருப்பு - 1/2 கப்
கடலைப் பருப்பு - 1/2 கப்துவரம் பருப்பு - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 8
பட்டை - 1
கிராம்பு - 4
தக்காளி - 1
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 10 பல்
வெங்காயம் - 1 (மீடியம் அளவு)
கேரட் - 1 (சின்னதாய் நறுக்கியது)
மல்லிக்கீரை - தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 3
கெட்டியான தேங்காய் பால் - 1 கப்

செய்முறை:

முதலில் அரிசி, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஒரு கடையில் பாசிப்பருப்பை நன்கு வறுக்க வேண்டும். பிறகு, ப்ரஷர் குக்கரில் பச்சை அரிசி, வறுத்த பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, வெங்காயம், தக்காளி, நறுக்கிய இஞ்சி, 10 பல் பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், மல்லிக்கீரை, கேரட் ஆகிய அனைத்தையும் சேர்த்து 8 கப் தண்ணீர் விட்டு 4 முதல் 5 விசில் வரும்வரை வேகவைக்க வேண்டும்.

பின்னர், அடுப்பை சிம்மரில் போட்டு இன்னொரு 5 விசில் வரும்வரைக் காத்திருக்கவும். தேவைக்கேற்ப, கஞ்சி பதமாக வரும்வரை சிம்மரில் கொதிக்கவிடுங்கள். பிறகு, கெட்டியாக வைத்திருக்கும் தேங்காய் பாலுடன் அதைக் கிளறிவிட்டு 5 நிமிடம் கொதிவந்த பின் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

ஒரு கடையில் சிறுது எண்ணெய் விட்டு, பட்டை 1, கிராம்பு 4 போட்டு மல்லிக்கீரை தேவைக்கேற்ப சேர்த்து தாளிக்கவும். தயார் நிலையிலுள்ள கஞ்சியில் அதைச் சேர்த்து ஒருமுறை கிளறினால், கம கம நோன்பு கஞ்சி ரெடி!


Also see:
First published: April 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading