பிரண்டை அடிக்கடி கிடைக்காதவர்கள், அவ்வபோது சுத்தம் செய்து பயன்படுத்துவதற்கு சிரமமாக இருப்பவர்கள் பிரண்டையை பொடியாக்கி வைத்துகொண்டால் மூன்று மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:
பிரண்டை - 3 கப்
உளுந்தம் பருப்பு - 1 கப்
கடலை பருப்பு - அரை கப்
வரமிளகாய் - 1 கைப்பிடி அல்லது காரத்துக்கேற்ப
கருப்பு எள்ளு - 5 டீஸ்பூன்
பெருங்காயம் - கட்டியாக
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
மிளகு - 2 டீஸ்பூன்
செய்முறை:
1. பிரண்டையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் வறுத்து தட்டில் கொட்டி ஆறவிடுங்கள். அனைத்தையும் தனித்தனியாக வாணலியில் வறுத்து வைத்துகொள்ளுங்கள். தட்டில் கொட்டி ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளுங்கள்.
2. முதலில் பிரண்டையை அரைத்து பிறகு மற்ற பொருள்களை சேர்த்து அரைக்கவும்.
3. இந்த பொடியை கண்ணாடி பாட்டிலில் வைத்து பயன்படுத்துங்கள். இது நல்லெண்ணெய் சேர்த்து இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ளலாம். சாதத்தில் பொடியை கலந்து நெய்விட்டும் சாப்பிடலாம். இப்போது பிரண்டை பொடி ரெடி, இதை எல்லாருமே விரும்பி சாப்பிடுவார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food recipes, Idly podi