பீர்க்கங்காய் சட்னி செய்வது எப்படி?

பீர்க்கங்காய் சட்னி செய்வது எப்படி?

பீர்க்கங்காய் சட்னி

பீர்க்கங்காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் தாது உப்புகள் போன்றவை இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

 • Share this:
  பீர்க்கங்காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் தாது உப்புகள் போன்றவை இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். ஒரே மாதிரியான சட்னி இல்லாமல் தினமும் இது போல வித்தியாசமான அதே சமயத்தில் சத்துகள் நிறைந்த சட்னி வகைகளை செய்து கொடுக்கலாம். பீர்க்கங்காய் கொண்டு சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

  தேவையான பொருட்கள் :

  பீர்க்கங்காய் - 1

  வெங்காயம் - 1

  தக்காளி - 1

  புளி - 1 நெல்லிக்காய் அளவு

  வரமிளகாய் - 6

  உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்

  உப்பு - தேவையான அளவு

  எண்ணெய் - தேவையான அளவு

  கடுகு - 1/4 டீஸ்பூன்

  உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

  கறிவேப்பிலை - சிறிது

  எண்ணெய் - தேவையான அளவு

  செய்முறை :

  பீர்க்கங்காயை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும்.

  பின்பு நறுக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காய், புளியையும் போட்டு சிறிது நேரம் வதக்கி இறக்க வேண்டும். பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.

  மேலும் படிக்க... கோடை வெயிலுக்கு ஏற்ற சுரைக்காய் தயிர் பச்சடி... ரெசிபி இதோ..

  வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்ற வேண்டும். இப்போது சுவையான பீர்க்கங்காய் சட்னி ரெடி. பீர்க்கங்காய் சட்னியை தோசை, இட்லி, ஏன் சாதத்துடன் கூட சேர்த்து சாப்பிடலாம். இதில் சிறிது தேங்காயும் சேர்த்து துவையல் போலவும் செய்யலாம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: