குழந்தைகளுக்கு பிடித்த ஓமப்பொடி... சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்...

ஓமப்பொடி

குழந்தைகளுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ்களை சுலபமாக வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்றும் என்னென்ன செய்யலாம் என்றும் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

  • Share this:
அடுத்தடுத்து விஷேசங்களும் பண்டிகைகளும் வருகின்றன, கிருஷ்ண ஜெயந்தி, பிள்ளையார் சதுர்த்தி, நவராத்திரி என வரிசையாக வருகின்றன. அந்த சமயத்தில் குழந்தைகளுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ்களை சுலபமாக வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்றும் என்னென்ன செய்யலாம் என்றும் தெரிந்துக் கொள்ளலாம். கொரோனாவால் வீட்டிலேயே இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான செய்ய சுலபமான ஒன்று ஓமப்பொடி. இதை எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளல்லாம் வாங்க... 

தேவையான பொருட்கள்: 

கடலை மாவு - 2 கப்

அரிசி மாவு - ஒரு கப்

ஓமம் - சிறிது

தனி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

பெருங்காயம் - கொஞ்சம்

உப்பு - தேவைக்கு

கடலை எண்ணெய் - தேவைக்கு.

மேலும் படிக்க... பீர்க்கங்காய் தோல் துவையல் செய்வது எப்படி தெரியுமா?செய்முறை:

முதலில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள்,உப்பு இவற்றை சல்லடையில் போட்டு ஒருமுறை சலித்தெடுக்கவும். இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பெருங்காயம், ஓமம் இவற்றைப் போட்டு சிறிதுசிறிதாகத் தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்தில் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.

பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். எண்ணெய் காய்ந்ததும் முறுக்கு அச்சில் ஓமப்பொடி வில்லையைப்போட்டு அதில் கொள்ளுமளவிற்கு மாவைப் போட்டு நேராகவே வாணலில் பிழிந்துவிடவும் அல்லது ஒரு துணியில் பிழிந்து அதை எண்ணெய்யில் எடுத்து போடவும்.

மேலும் படிக்க...கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்... உப்பு சீடை ரெசிபி...

பிழிந்த சிறிது நேரத்திலே வெந்துவிடும். உடனே மறுபக்கம் திருப்பிவிட்டு எடுத்துவிடவும். கொஞ்சம் கவனம் தேவை. இல்லையென்றால் ரொம்பவே சிவந்துவிடும். இறுதியில் கறிவேப்பிலையை அந்த எண்ணெயில் போட்டு பொரித்து, ஓமப்பொடியுடன் சேர்த்து, கையால் உதிர்த்துவிட்டால், ஓமப்பொடி ரெடி.

மேலும் படிக்க... விநாயகருக்கு பிடித்தமான பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vaijayanthi S
First published: