Nendram Banana Chips | நேந்திரம் சிப்ஸ் வீட்டில் செய்ய ரெசிபி...
Nendram Banana Chips | நேந்திரம் சிப்ஸ் வீட்டில் செய்ய ரெசிபி...
நேந்திரம் சிப்ஸ்
Nendram Banana Chips | ஆரோக்கியமான தின்பண்டங்களில் ஒன்று நேந்திரம் சிப்ஸ். அதில் சேர்க்கப்பட்டுள்ள உப்பும் காரமும் உண்டாக்கும் சுவையால் அனைவரும் அதை சிறந்த மாலைநேர திண்பண்டமாக எடுத்துக்கொள்ளலாம்.
நேந்திரம் வாழைக்காயில் செய்யப்படும் சிப்ஸ் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தான் அதிகமாக கிடைக்கும். குறிப்பாக இந்த சிப்ஸை கேரளாவின் சிறப்பு பண்டிகை நாட்களில் அதிகமாக காணலாம். இந்த பதிவில் நேந்திரம் சிப்ஸ் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்...
தேவையான பொருட்கள்:
நேந்திரங்காய் -3
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
உப்பு -1 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய்
செய்முறை :
ஒரு வாழைக்காயை எடுத்து உலர வைத்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி கொதிக்க வைத்து அதில் மிதமான சூடு வந்தவுடன் துண்டுகளை எண்ணெயில் போட்டு விட வேண்டும். சில வினாடிகள் கழித்து மஞ்சள்தூள் கலந்த தண்ணியை எண்ணெயில் கலந்து கிளறிவிட வேண்டும். சிறிது நேரம் கழித்து சிப்ஸை எடுத்துவிடலாம்.
இவ்வாறு எண்ணெயில் இருந்து எடுத்தவுடன் அதை ஒரு காகிதத்தின் மேல் வைத்தால் தேவை இல்லாத எண்ணெய் வெளியேறிவிடும். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது தனியாக தேனீருடன் சாப்பிடலாம்.
மேலும் படிக்க...
குறிப்பு:
இதை தேனில் ஊற வைத்தும் சாப்பிடலாம். அனைவரும் உண்ணக்கூடியது. இதை தேங்காய் எண்ணெய்யில் தான் பொறிப்பார்கள். தேங்காய் எண்ணெய் உடலுக்கு மிகவும் நல்லது. இதை வீட்டில் செய்வது மிகவும் எளிது. ட்ரை பண்ணிப்பாருங்க...
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.