முகப்பு /செய்தி /lifestyle / சுவையான கிராமத்து கறி ரசம் செய்வது எப்படி?

சுவையான கிராமத்து கறி ரசம் செய்வது எப்படி?

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ரத்த சோகை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, கர்ப்பிணிகள் மட்டனைச் சாப்பிட்டால், அதில் உள்ள இரும்புச்சத்து, ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

  • 1-MIN READ
  • Last Updated :

    கிராமத்தில் பொதுவாக மட்டனை கறி என்றுதான் கூறுவார்கள். கறி குழம்பு, கறி வறுவல் செய்வதை விட கறி ரசம்தான் அதிகமாக செய்வார்கள். ஏனென்றால் அது குழந்தைகளுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் மிகவும் உகந்த உணவாக இருக்கும் . அதனால் கறி ரசம்தான் செய்து கொடுப்பார்கள்.

    அத்தகைய மட்டன் கறியில் சுவையான ரசம் வைப்பது எப்படி என்று இந்த குறிப்பில் பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்: 

    மட்டன் - கால் கிலோ

    இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்

    பட்டை, கிராம் பொடித்து - 1 ஸ்பூன்

    மிளகுத் தூள்- 1 ஸ்பூன்

    சீரகம் - 1 ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிதளவு

    காய்ந்த மிளகாய் - 2

    சிறிய வெங்காயம் - 1

    தக்காளி - 1

    புளி - சிறிதளவு

    நல்லெண்ணெய்- தேவையான அளவு

    கொத்துமல்லி, கறிவேப்பில்லை - சிறிதளவு

    மட்டன்

    செய்முறை: 

    மட்டன் மற்றும் அதன் எலும்புத் துண்டுகளை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். அத்துடன் மஞ்சள் தூள், இஞ்சி-பூண்டு விழுது, சீரகம், கொத்துமல்லி, உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். 5 முதல் 8 விசில் வந்தவுடன் அடுப்பை நிறுத்தி குக்கரை இறக்கி வைக்க வேண்டும்.

    அதன் பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சோம்பு, பட்டை கிராம்பு, சீரகம், மிளகுத் தூள், காய்ந்த மிளகாய், பூண்டு 4 பல், நறுக்கிய வெங்காயம், தக்காளி ஆகிவற்றை சேர்த்து தாளித்து வதக்க வேண்டும். நன்றாக வதங்கியதும் புளி தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

    அதன் பின்னர் குக்கரில் வேக வைத்த மட்டன் தண்ணீரை மட்டும் தனியாக எடுத்து, தாளித்த கலவையில் ஊற்ற வேண்டும். கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்க வேண்டும். இப்போது சுவையான மட்டன் கறி ரசம் ரெடி. விரும்பினால் கறி ரசத்தில் சில கறி துண்டுகளையும் எலும்பு துண்டுகளையும் போட்டு பரிமாறலாம். இல்லையென்றால் அவற்றை எடுத்து தனியாக மட்டன் வறுவல் செய்துக் கொள்ளலாம்.

    குறிப்பு:

    கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ரத்த சோகை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, கர்ப்பிணிகள் மட்டனைச் சாப்பிட்டால், அதில் உள்ள இரும்புச்சத்து, ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

    மேலும் படிக்க...

    லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

    First published: