• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மட்டன் கீமா செய்வது எப்படி?

மட்டன் கீமா செய்வது எப்படி?

மட்டன் கீமா

மட்டன் கீமா

வீட்டில் மட்டன் கீமாவில் வறுவல் செய்து கொடுத்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்...

  • Share this:
மட்டன் கொத்துக்கறியைதான் மட்டன் கீமா என்று கூறுகிறார்கள். இது தோசை, பூரி, நாண், புலாவ், வெள்ளை சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். மட்டன் கொத்துக்கறி. செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...

தேவையான பொருட்கள்

மட்டன் கொத்துக்கறி - 200 கிராம்,

எண்ணெய் தேவைக்கு.

தாளிக்க

இடிச்ச பூண்டு - 3,

இடிச்ச சின்ன வெங்காயம் - 5,

காய்ந்த மிளகாய் - 5,

கறிவேப்பிலை - சிறிது,

மட்டன் மசாலா - 4 தேக்கரண்டி,

கொத்தமல்லி, புதினா, உப்பு, நெய் - ½ தேக்கரண்டி.

மட்டன்


செய்முறை

மட்டன் கொத்துக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும். கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இடித்த பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் மட்டன் கொத்துக்கறி, உப்பு, மட்டன் மசாலா சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து கொத்துக்கறி வேகும் வரை மூடி வைக்கவும். இறுதியாக தேவையான உப்பு சேர்த்து நெய், புதினா, மல்லி சேர்த்து பரிமாறவும். சூப்பரான மட்டன் கொத்துக்கறி ரெடி.

மேலும் படிக்க... 

நாவூற வைக்கும் இறால் ஊறுகாய் செய்ய ரெசிபி!           

நண்டு ஆம்லெட் செய்வது எப்படி?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: