ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குழந்தைகளுக்கு ஏற்ற மட்டன் எலும்பு சூப்... இதோ ரெசிபி...

குழந்தைகளுக்கு ஏற்ற மட்டன் எலும்பு சூப்... இதோ ரெசிபி...

மட்டன் எலும்பு சூப்

மட்டன் எலும்பு சூப்

Mutton Bone Soup | மட்டன் சூப்பினை அருந்துவதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன் ஹீமோகுளோபினும் அதிகரிக்கும். இந்த எலும்பு சூபை செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அசைவ பிரியர்களுக்கு கட்டாயமாக மட்டன் எலும்பு சூப் பிடிக்கும். இந்த எலும்பு சூப்பை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் நல்ல ஆரோக்கியமாக இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த வெயிலுக்கு மட்டன் எலும்பு சூப் உடலை குளிர செய்யும். இதை மாலை நேரத்தில் குடித்தால் அருமையாக இருக்கும்.

தேவையானவை 

ஆட்டு எலும்பு - 1/2 கிலோ

தக்காளி - 1/4 கிலோ

வெங்காயம் - 1/4

பச்சை மிளகாய் - 2

அரைக்க தேவையானவை :

இஞ்சி - 10 கிராம்,

பூண்டு - 10 கிராம்,

மிளகு தூள் - 2 தேக்கரண்டி,

ரொட்டித்தூள் - சிறிதளவு,

எலுமிச்சம்பழம் - பாதி,

சீரகதூள் - 2 ஸ்பூன்,

தனியாதூள் - 2 ஸ்பூன்,

கொத்தமல்லி இலை - 1/2 கட்டு,

நெய் - 50 கிராம்,

சர்க்கரை - 1/2 ஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு,

செய்முறை 

முதலில் தக்காளியை சுத்தம் செய்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் நெய்யை ஊற்றி, சூடானதும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். அது பொன்னிற மானதும், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, எலும்பையும் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் மிளகு தூள், சீரகதூள், தனியாதூள், கொத்த மல்லி இலை சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரைச் சேர்த்து மூடி வைக்க வேண்டும்.

Also see... சித்தூர் பாலக் சிக்கன் செய்வது எப்படி?

பின்னர் தேவைக் கேற்ப உப்பு சேர்க்கவும். 1/4 லிட்டர் நீரைச் சுண்ட வைக்கவும். பின் அரைத்த தக்காளி சேர்த்து சூப்பை இறக்கவும். அதன் பின் சூப்பை வடிகட்டி தூள் செய்த ரொட்டியைத் தூவவும். பின் எலுமிச்சம்பழச்சாறு, சர்க்கரை சேர்த்து இறக்கினால் மட்டன் எலும்பு சூப் ரெடி.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Mutton recipes