ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

முட்டை கிரேவியை இனிமேல் இப்படி செஞ்சு பாருங்கள்...

முட்டை கிரேவியை இனிமேல் இப்படி செஞ்சு பாருங்கள்...

முட்டை கிரேவி

முட்டை கிரேவி

புரதச்சத்துக்கு முட்டைதான் சரியான உணவாக இருக்கும். உடல் எடையைக் குறைப்போருக்கு முட்டை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

முட்டை அதிக புரதச்சத்து நிறைந்தது. குறிப்பாக அதன் மஞ்சள் கரு அதிக கொழுப்பு நிறைந்தது. அத்தகைய முட்டையை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் நல்லது. இந்த பதிவில் முட்டையில் தொக்கு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

முட்டை - 4

தக்காளி - 2

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

மல்லித்தூள் - 2 டீஸ்பூன்

சீரகத்தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிது

தாளிக்க

எண்ணெய் - 3 டீஸ்பூன்

பட்டை - 1 இன்ச் அளவு

கிராம்பு - 1

பெரிய வெங்காயம் - 2

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை 

முதலில் முட்டைகளை வேக வைத்து கொள்ளவும். பெரிய வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும்.

பிறகு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.

Also see... உடல் எடையை குறைக்கும் சுரைக்காய் பச்சடி... ட்ரை பண்ணி பாருங்க..!

தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். அதனுடன் உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

இப்போது வேக வைத்துள்ள முட்டைகளை இரண்டாக கட் செய்யவும் அல்லது நடுவே கீறி கொள்ளவும். அடுப்பை சிம்மில் வைத்து முட்டைகளை சேர்க்கவும். 5 நிமிடம் கழித்து மல்லித்தழையை தூவி அடுப்பை அணைக்கவும்.

சுவையான முட்டை தொக்கு தயார். இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடால் அருமையாக இருக்கும்.

First published:

Tags: Egg recipes