ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஆரோக்கியம் நிறைந்த சிறுதானிய பொங்கல்!

ஆரோக்கியம் நிறைந்த சிறுதானிய பொங்கல்!

சாமை பொங்கல்

சாமை பொங்கல்

millet ven pongal | பல்வேறு நன்மைகள் கொண்ட சாமை அரிசி பொங்கல் செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தினசரி ஒரு வேளை சாமையை உணவாக எடுக்கலாம். இது எல்லா வயதினருக்கும் ஏற்றவை. சுலபமாக ஜீரணிக்க கூடியவை. சிறிதளவு எடுத்துகொண்டாலும் வயிறு நிரம்ப கூடும். இதை சோறாக மட்டும் அல்லாமல் சாமை புட்டு, சாமை ரொட்டி, சாமை பிஸ்கட், சாமை பொங்கல், சாமை உப்புமா என்று விதவிதமாக சமைக்கலாம். இத்தகைய நன்மைகள் கொண்ட சாமை அரிசியில் பொங்கல் செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்...

தேவையான பொருட்கள் :

சாமை அரிசி - 100 கிராம்

பாசிப்பருப்பு - 50 கிராம்

சீரகம் - 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - 50 மில்லி

பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகுத்தூள் - தேவையான அளவு (மிளகு 8-10)

உப்பு - தேவையான அளவு

இஞ்சி - ஒரு துண்டு

தண்ணீர் - 450 மில்லி.

முந்திரி - 3

சாமை பொங்கல்

செய்முறை:

முதலில் நன்கு கழுவி சுத்தம் செய்த சாமை அரிசியுடன் பாசிப்பருப்பு, தண்ணீர், உப்பு சேர்த்து குழைய வேக வைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து சீரகம், பொடியாய் நறுக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், முந்திரி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, குழைய வேகவைத்த அரிசியுடன் இதைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் சுவையான சாமைப் பொங்கல் ரெடி.

மேலும் படிக்க...  உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் காலை இந்த ஜூஸ் குடித்தால் நல்லது

Published by:Vaijayanthi S
First published:

Tags: Food, Pongal recipes