ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மைக்ரோவேவ் ஓவன் கிரில் சிக்கன்... இதோ ரெசிபி...

மைக்ரோவேவ் ஓவன் கிரில் சிக்கன்... இதோ ரெசிபி...

மைக்ரோவேவ் ஓவன் கிரில் சிக்கன்

மைக்ரோவேவ் ஓவன் கிரில் சிக்கன்

Microwave Oven Grill chicken | குழந்தைகளுக்கு கிரில் சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே மைக்ரோவேவ் ஓவனில் கிரில் சிக்கன் செய்வது எப்படி என்று tஹெரிந்துக் கொள்ளலாம்...

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  மைக்ரோவேவ் ஓவன் உள்ளவர்கள் கிரில் சிக்கனை இப்படி செஞ்சு பாருங்கள். செம்மையாக இருக்கும். வீட்டில் உள்ள அனைவருமே இன்னும் வேண்டும் என கேட்பார்கள்... இதனை எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்...

  தேவையான பொருட்கள்:

  சிக்கன் - 1/2 கிலோ

  மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்

  இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன்

  கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்

  மிளகு தூள் - 1 டீஸ்பூன்

  மஞ்சள் தூள் - சிறிதளவு

  சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

  தயிர் - 1/2 கப்

  எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

  முட்டை - 1

  உப்பு - தேவையான அளவு

  எண்ணெய் - சிறிதளவு

  செய்முறை:

  முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். மசாலா பொருட்கள் அனைத்தையும் சிக்கனோடு சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின்னர் மைக்ரோவேவ் ஓவனை 200 டிகிரி சூடு பண்ணவும். இப்போது சிக்கனுடன் எண்ணெய் சிறிது சேர்த்து மைக்ரோவேவ் ஓவனில் வைக்ககூடிய உயரமான ட்ரேயில் வைத்து 300 டிகிரி சூட்டில் 20 நிமிடம் வைக்கவும். பிறகு அதை வெளியே எடுத்து சிக்கனை திருப்பி போட்டு மீண்டும் 20, நிமிடம் வைக்கவும். இப்போது டேஸ்டியான கிரில் சிக்கன் ரெடி...

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Chicken Recipes, Food