மசாலா தோசை தெரியும்... மசாலா சப்பாத்தி தெரியுமா?

மசாலா சப்பாத்தியை செய்து கொடுத்தால் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்குமே பிடிக்கும்...

மசாலா சப்பாத்தியை செய்து கொடுத்தால் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்குமே பிடிக்கும்...

 • Share this:
  வழக்கமான முறையில் சப்பாத்தி செய்து சாப்பிடுவதை விட , சற்று வித்தியாசமாக மசாலா சப்பாத்தியை செய்து கொடுத்தால் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்குமே பிடிக்கும்...

  தேவையானவை

  கோதுமை  மாவு - 300 கிராம்,

  இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்,

  பச்சை மிளகாய் - 6,

  வெங்காயம் - 1 கப் (அரிந்தது),

  கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்,

  எண்ணெய் -  50 கிராம்,

  தண்ணீர் - 1 டம்ளர்,

  உப்பு - தேவைக்கு.

  கீரை - தேவைப்பட்டால்  செய்முறை

  கோதுமை மாவில் உப்பு சேர்த்து, அத்துடன் வதக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு  பேஸ்ட், பச்சை மிளகாய், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு பிசைந்து  1/2 மணி  நேரம் ஊற வைக்கவும். பின்பு மெல்லிய சப்பாத்திகளாய் இட்டு, எண்ணெய் விட்டு  பொன்நிறமாய் சுட்டு எடுத்தால் சுவையான மசாலா சப்பாத்தி தயார்.

  மேலும் படிக்க... நீங்கள் தயிர் விரும்பியா? அப்போ இந்த இட்லியை மிஸ் பண்ணிடாதீங்க...

  தேவைப்பட்டால் அத்துடன் கோதுமை மாவுடன் உங்களுக்கு பிடித்தமான கீரையயும் சேர்த்து பிசைந்து கொள்ளலாம். பொதுவாக வெந்தயக் கீரையை பயன்படுத்துவார்கள்...

  மேலும் படிக்க... வாழைக்காய் பச்சடி செஞ்சுருக்கீங்களா? இதோ ரெசிபி
  Published by:Vaijayanthi S
  First published: