மாங்காய் சட்னி செய்வது எப்படி?

மாங்காய் சட்னி கர்ப்பிணிகள் சாப்பிட்டால் வாந்தி போன்ற உபாதைகள் வருவது குறையும்.

மாங்காய் சட்னி செய்வது எப்படி?
மாங்காய் சட்னி
  • News18
  • Last Updated: May 29, 2019, 9:48 AM IST
  • Share this:
கோடை காலத்தில் மாங்காய் அதிகளவில் கிடைக்கும் அத்தகைய மாங்காயைக் கொண்டு பலவிதமான ரெசிபிகளை செய்யலாம்.  மாங்காயைக் கொண்டு சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாங்காய் சட்னி செய்ய தேவையான பொருள்கள்: 

துருவிய தேங்காய் – ஒரு கப்


தோல் நீக்கி வெட்டிய மாங்காய் – 4 துண்டுகள்

இஞ்சி- சிறிய துண்டு

பூண்டு - 2 பல்பச்சை மிளகாய் (பெரியது) – ஒன்று

தாளிக்க கடுகு – கால் டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

உப்பு – தேவையான அளவு

மாங்காய்


செய்முறை:

மாங்காயை எடுத்து நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் தேங்காயையும் எடுத்து துருவிக்கொள்ள வேண்டும். அதன்பின்னர் மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மாங்காய், தேங்காய், உப்பு ஆகியவற்றை  சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைக்க வேண்டும். அதன்பின்னர் கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். இப்போது புளிப்பான மாங்காய் சட்னி ரெடி. இது கர்பிணிகள் சாப்பிட்டால் வாந்தி போன்ற உபாதைகள் வருவது குறையும்.

Also see... மணக்கும் மணத்தக்காளி காரக் குழம்பு செய்வது எப்படி? 

ருசியான மணமணக்கும் மாம்பழ மோர்குழம்பு செய்வது எப்படி?

Also see... 
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading