mango lassi | கோடையில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று மாம்பழம். அதனை வைத்து ஏகப்பட்ட ரெசிபிக்கள் செய்யலாம். ஆனால் குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான மேங்கோ லஸ்ஸியை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...
கோடை காலத்தில் கிடைக்கும் தர்பூசணி, நுங்கு, இளநீர், பதநீர், நீர்மோர், ஆகியவை உடல் சூட்டை குறைக்கவும் உடலில் நீர் சத்துக்களை அதிகரிக்கவும் செய்கிறது. அதேபோல, கோடை பருவத்தில் கிடைக்கும் மற்றொரு சிறப்பு வாய்ந்த பழம் மாம்பழம். இதனை சாப்பிடுவதால் உடலிற்கு அதிக சத்துக்கள் கிடைக்கின்றன. இதை வைத்து லஸ்ஸி செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
தயிர் - 125 மில்லி
குளிர்ந்த தண்ணீர் - 200 மில்லி
மாம்பழம் - 1
சர்க்கரை - தேவையான அளவு
புதினா - சிறிதளவு
உப்பு - 1 சிட்டிகை
மாம்பழம்
செய்முறை:
முதலில் மாம்பழத்தை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின்னர், தயிர், சர்க்கரை, மாம்பழ துண்டுகள், புதினா, உப்பு, குளிர்ந்த நீர் ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு கிளாஸ் ஊற்றி இரண்டு ஐஸ்கட்டித் துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான லஸ்ஸி ரெடி. தேவைப்பட்டால் நொறுக்கிய பாதம் பிஸ்தா ஆகியவற்றை தூவி மற்றும் புதினா இலைகள் வைத்து அலங்கரித்து பரிமாறலாம்.
பொதுவாக மாம்பழ லஸ்ஸி செய்யும்போது உப்பு பெரிதும் சேர்க்கமாட்டார்கள். ஆனால், ஒரு சிட்டிகை கருப்பு அல்லது இளஞ்சிவப்பு உப்பு சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமானதாக இருக்கும்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.