• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மழை காலத்திற்கு ஏற்ற மாங்காய் வற்றல் குழம்பு... இதோ ரெசிபி!

மழை காலத்திற்கு ஏற்ற மாங்காய் வற்றல் குழம்பு... இதோ ரெசிபி!

மாங்காய் வற்றல் குழம்பு

மாங்காய் வற்றல் குழம்பு

மாங்காய் வற்றல் குழம்பை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் வயிற்று வலி, வாயு தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

  • Share this:
மாங்காய் வற்றல் குழம்பை தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் மழை காலங்களில் செய்து சாப்பிடுவது வழக்கம். இது ஜீரண சக்தியை அதிகரிப்பதுடன், பற்களின் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு, வாய் துர்நாற்றம், பல் சொத்தை போன்ற பிரச்னைகளை தடுத்து, பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். கர்ப்பிணிப் பெண்கள் இதை சாப்பிட்டால் வாந்தி போன்ற உபாதைகள் வருவதைத் தடுக்கலாம்.

தேவையான பொருட்கள்: 

மாங்காய் வற்றல் – தேவைக்கேற்ப

புளி – சிறிதளவு

மிளகு – ஒரு டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிது

அரிசி – ஒரு டீஸ்பூன்

கடுகு – அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – ஒன்று

நல்லெண்ணெய் - தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

மாங்காய் வற்றல்


செய்முறை: மாங்காய் வற்றலை நன்றாக வெந்நீரில் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அத்துடன் புளியையும் தனியாக எடுத்து ஊற வைக்க வேண்டும். பிறகு, நன்றாக கரைத்த புளித்தண்ணீருடன் உப்பு, பெருங்காயத்தூள், நெய்யில் வறுத்த மிளகு, சீரகம் மற்றும் அரிசி, மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், மீதமுள்ள கறிவேப்பிலையைக் கிள்ளிப்போட்டு தாளிக்கவும். அத்துடன் மாங்காய் வற்றலையும் சேர்த்து வதக்க வேண்டும். இவை நன்றாக வதங்கியதும் அரைத்து எடுத்த கலவையை சேர்த்து 2 கொதி வந்ததும் இறக்க வேண்டும். அதன்பின் அதில் சிறிதளவு நெய் ஊற்றி பரிமாறலாம்.

இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் வயிற்று வலி, வாயு தொல்லை நீங்க உதவும்.

மேலும் படிக்க... குழந்தைகளுக்கு பிடித்தமான முட்டை மக்ரோனி...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: