சர்க்கரையின் அளவை குறைக்க கருப்பட்டி இட்லி சாப்பிடுங்க...

கருப்பட்டி இட்லி

காபியில் சர்ச்சரைக்கு பதில் கருப்பட்டியை சேர்த்து குடித்தால், நமது உடலுக்கு சுண்ணாம்புச் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக கிடைக்கிறது. மேலும் இதனை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம். அத்தகைய கருப்பட்டியில் இட்லி செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

 • Share this:
  நீரிழிவு நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நமது உடலுக்கு தேவையான கால்சியம் இதில் கிடைக்கிறது.

  தேவையானவை:

  இட்லி அரிசி - 8 கப்,

  உளுத்தம்பருப்பு - 1 கப்,

  உப்பு - தேவைக்கு,

  சுத்தமான கருப்பட்டி - 2 கப்,

  சிறுபருப்பு - 1 கப்,

  நெய் - சிறிதளவு,

  தேங்காய்த்துருவல் - 1 கப்.

  கருப்பட்டி


  செய்முறை :

  முதலில் இட்லி அரிசியை 8 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும். இரண்டையும் தனித்தனியாக இட்லி மாவு பதத்துக்கு அரைக்கவும். சிறுபருப்பை சுத்தம் செய்து, சிவக்க வறுத்து வேக வைக்கவும். பாதி வெந்தால் போதுமானது. இத்துடன் கரைத்து, பொடித்த கருப்பட்டியையும், தேங்காய்த் துருவலையும் சேர்த்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.

  மேலும் படிக்க... நீங்கள் தயிர் விரும்பியா? அப்போ இந்த இட்லியை மிஸ் பண்ணிடாதீங்க...

  இட்லித்தட்டில் அரை கரண்டி இட்லி மாவு ஊற்றி, மத்தியில் கருப்பட்டிக் கலவையை பரப்பி, அதன்மேல் மேலும் அரைக்கரண்டி இட்லி மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும். இப்போது கருப்பட்டி இட்லி ரெடி. இந்த இட்லி புதிய சுவையுடன் இருக்கும். மிஸ் பண்ணாம செய்து சாபிட்டு பாருங்கள்... முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல காலை உணவாக இருக்கும்...

  மேலும் படிக்க... முருங்கைக்கீரை துவையல் செஞ்சுரூக்கீங்களா? இதோ ரெசிபி...
  Published by:Vaijayanthi S
  First published: