விநாயகர் சதுர்த்திக்கு வாங்கிய பொரி கட்டாயமாக சில பேர் வீடுகளில் மிஞ்சியிருக்கும். மிஞ்சிய பொரி நமுத்து போயிருந்தால் கூட பரவாயில்லை. அந்த பொறியை வைத்து சூப்பரான மொறு மொறு காரப்பொரியை செய்து விடலாம்... இதை குழந்தைகள் முதல் வீட்டில் உள்ள பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்... வாங்க எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்...
தேவையான பொருட்கள்
அரசிப்பொரி - 1லிட்டர்
நிலக்கடலைப்பருப்பு - 1/2கப்
பொட்டுக்கடலை - 1/2கப்
முந்திரிப் பருப்பு - 10
கருவேப்பிலை
மிளகாய்த்தூள்- 1ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் - 4ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, முந்திரிப் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து வறுத்துக்கொண்டு, அதன்பின் அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வறுத்த பின்னர், அடுப்பை அணைத்து விட்டு பொரி, உப்பு சேர்த்து கிளறி விட்டு இறக்கவும். இப்போது காரப்பொறரி ரெடி... பரிமாறும் போது அதன்மேல் கேரட் துருவல், வெங்காயம் பொடியாக நறுக்கியதைை தூவிவிட்டு பரிமாறினால் சுவை மிகுதியாக இருக்கும்...
மேலும் படிக்க... தக்காளி மசாலா பூரி ரெசிபி...
காளான் குடைமிளகாய் பொரியல் செய்வது எப்படி?
செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு
சிக்கன் பொரியல் சாப்பிட்டுருக்கீங்களா?
மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி?
சிக்கன் லெக் பீஸ் தெரியும் மட்டன் லெக் பீஸ் தெரியுமா?
சுவையான மீன் தொக்கு செய்வது எப்படி...?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food