சிம்பிளான உணவாக இருந்தாலும் நல்ல சத்தான உணவாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு பிடிக்கிற உணவாக இருக்க வேண்டும். இந்த வகையில் நெய் சாதத்தை குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். டேஸ்டியான கம கம நெய் சாதம் எப்படி செய்வது என்பதை இந்த பதிவி தெரிந்துக் கொள்ளலாம்...
தேவையான பொருட்கள் :
பொன்னி அரிசி – கால் கிலோ
நெய் – 100 கிராம்
பட்டை – 3 துண்டுகள்
கிராம்பு – 4
ஏலக்காய் – 2
பூண்டு – 7 பல்
பிரியாணி இலை – 1
கறிவேப்பிலை – ஒரு கொத்து
முந்திரி, திராட்சை – தேவைக்கு
செய்முறை :
முதலில் அரிசியை 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வடித்துக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து தட்டிக் கொள்ளவும். ஏலக்காயையும் லேசாக தட்டிக் கொள்ள வேண்டும். அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, சேர்த்து தாளித்த பின் முந்திரி, திராட்சை சேர்க்க வேண்டும். அடுத்து அதில் வடிகட்டிய அரிசியை போட்டு 5 நிமிடம் கிளறவும்.
பிறகு இதனுடன் ஒரு பங்கு அரிசிக்கு இரண்டரை பங்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரை மூடி விசில் போடாமல் மிதமான தீயில் 10 நிமிடம் வேகவைக்கவும். பத்துநிமிடம் கழித்து சாதம் குழையும் முன் இறக்கினால் டேஸ்டியான நெய் சாதம் தயார். இதனுடன் சைடு டிஸ்சாக குருமா, ரைத்தா பொருத்தமாக இருக்கும். வளர்கிற குழந்தைகளுக்கு நெய் உணவு அவசியம். எனவே இந்த உணவை மிஸ் பண்ணாதீங்க!
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.