• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • முட்டையில் 65 ஃப்ரை... எப்படி செய்யனும் தெரியுமா?

முட்டையில் 65 ஃப்ரை... எப்படி செய்யனும் தெரியுமா?

முட்டை 65

முட்டை 65

சிக்கன் 65 சாப்பிட்டு இருப்பீங்க முட்டையில் 65 ஃபிரை சாப்பிட்டு இருக்கீங்களா... வாங்க முட்டை 65 ஃப்ரை எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்வோம்....

  • Share this:
முட்டையில் 65 செய்து கொடுத்தால் வீட்டில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.. வாங்க அதனை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்...

தேவையான பொருள்கள்

முட்டை - 2

சோளமாவு - 2 மேஜைக்கரண்டி

மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

புட் கலர் - 1/4 தேக்கரண்டி

தயிர் - 1 மேஜைக்கரண்டி

மல்லித்தழை - சிறிது

உப்பு - தேவையான அளவு

பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு

முட்டை 


செய்முறை

ஒரு பாத்திரத்தில் முட்டைகள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும். 10 நிமிடங்களில் முட்டை வெந்து விடும். பிறகு முட்டைகளின் ஓட்டை எடுத்து விட்டு நான்காக வெட்டி வைக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சோளமாவு, மிளகாய் தூள், புட்கலர், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, தயிர் சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும். அதோடு வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை சேர்த்து மஞ்சள் கரு கிழே விழாமல் மெதுவாக கலவை எல்லா இடங்களிலும் படும் படி சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறிய பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு முட்டை துண்டுகளை போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் மெதுவாக திருப்பி போடவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும் எண்ணெய் உறுஞ்சியவுடன் மல்லித்தழை தூவி பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான முட்டை ப்ரை ரெடி.

மேலும் படிக்க... சிக்கன் பொரியல் சாப்பிட்டுருக்கீங்களா?

மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி?

சிக்கன் லெக் பீஸ் தெரியும் மட்டன் லெக் பீஸ் தெரியுமா?

சுவையான மீன் தொக்கு செய்வது எப்படி...?

கேரளா ஸ்டைல் வாழை இலை மீன் வறுவல் ரெசிபி..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: