• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஈசியான தேங்காய் சாதம் செய்வது எப்படி?

ஈசியான தேங்காய் சாதம் செய்வது எப்படி?

ஈசியான சுவையான தேங்காய் சாதம் செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்துக் கொளவோம் வாங்க....

  • Share this:
குழந்தைகளுக்கு தேங்காய் சாதம் மிகவும் பிடிக்கும். வேர்க்கடலை, முந்திரி சேர்த்து தேங்காய் சாதம் செய்தால் சூப்பராக இருக்கும். இந்த சாதத்தை எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

தேவையான பொருள்கள்

அரிசி - 150 கிராம்

தேங்காய் துருவல் - 100 கிராம்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க

தேங்காய் எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி

முந்திரிப் பருப்பு - 6

மிளகாய் வத்தல் - 2

காயத்தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது



செய்முறை

முதலில் அரிசியை கழுவி உப்பு மற்றும் 300 மில்லி தண்ணீர் சேர்த்து குக்கரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரை மணி நேரம் கழித்து குக்கரை அடுப்பில் வைக்கவும். இப்போது முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து ஆப் பண்ணவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து சாதத்தை எடுத்து தட்டில் பரப்பி 10 நிமிடம் ஆற விடவும்.

அடுப்பில் கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல், கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் காயத்தூள், கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து வறுக்கவும்.
தேங்காய் துருவல் சிவந்து வரும் போது சாதத்தை போட்டு நன்றாக கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். சுவையான தேங்காய் சாதம் ரெடி.

மேலும் படிக்க... வாழை இலையின் பயன்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: