முருங்கைக்கீரை துவையல் செஞ்சுரூக்கீங்களா? இதோ ரெசிபி...

முருங்கைக்கீரை துவையல்

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.

  • Share this:
சத்துகள் நிறைந்த முருங்கைக்கீரையை குழம்பு வைத்தும், பொரியல் செய்தும் சாப்பிட்டுள்ளோம். ஆனால் துவையல் செய்து சாப்பிட்டுருக்கீங்களா? வாங்க எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்....

தேவையான பொருட்கள்

முருங்கைக்கீரை ஆய்ந்தது - 1 கப்,

உப்பு - தேவைக்கு,

எண்ணெய் - தேவையான அளவு,

தேங்காய்த்துருவல் - 1/2 கப்,

காய்ந்த மிளகாய் - 2.

முருங்கை கீரை


செய்முறை

கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கீரையை சேர்த்து வதக்கி ஆற வைக்கவும். கீரையை தனியே எடுத்து வைத்துவிட்டு பிறகு அதே கடாயில் தேங்காய்த்துருவல், காய்ந்த மிளகாயை வறுத்து ஆறியதும் கீரையுடன் சேர்த்து அரைத்துப் பரிமாறவும். கீரை துவையல் இரும்புச்சத்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும்.

மருத்துவ குறிப்புகள்:
முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும்  நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.
இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை  கை கண்ட மருந்து.
Published by:Vaijayanthi S
First published: