Home /News /lifestyle /

சிக்கன் கட்லட் ஈஸியாக வீட்டிலேயே செய்ய ரெசிபி...

சிக்கன் கட்லட் ஈஸியாக வீட்டிலேயே செய்ய ரெசிபி...

எப்போது ஒரே மாதிரியாக சிக்கனை செய்யாமல் சற்று வித்தியாசமாக செய்து கொடுக்கலாமே?

எப்போது ஒரே மாதிரியாக சிக்கனை செய்யாமல் சற்று வித்தியாசமாக செய்து கொடுக்கலாமே?

எப்போது ஒரே மாதிரியாக சிக்கனை செய்யாமல் சற்று வித்தியாசமாக செய்து கொடுக்கலாமே?


மாலை நேரங்களில் சிக்கன் வைத்து கட்லட் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் குழந்தைகள வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்... வாங்க எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்


எலும்பில்லாத சிக்கன் – 1/2kg


இஞ்சி பூண்டு விழுது -1tsp


பச்சை மிளகாய் -2


கரம் மசாலா -1/4 tsp


உருளைக்கிழங்கு 100g


சோள மாவு -25g


எண்ணெய் -200g


கொத்தமல்லி


உப்பு






செய்முறை


சிக்கனை சுத்தப்படுத்தி நீரில் நன்கு கொதிக்க வைக்கவும் . பின் உருளைக்கிழங்கு தோல் நீக்கி மசித்து கொள்ளவும் . வெந்த சிக்கனை கைகளால் பிசைந்து உதிர்த்து கொள்ளவும் . அத்துடன் மசித்த உருளைக்கிழங்கு ,இஞ்சி பூண்டு விழுது , அரைத்த பச்சை மிளகாய் ,கரம் மசாலா ,உப்பு மற்றும் கொத்தமல்லி இட்டு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும் .


பின்பு அதனை வட்டமாக தட்டி எடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் பொரித்து எடுக்கவும் . இப்போது சுவையான ஈசியான சிக்கன் கட்லட் தயார் .



Published by:Vaijayanthi S
First published:

Tags: Chicken, Food

அடுத்த செய்தி