காரமான, சுவையான கேரட் துவையல் செய்வது எப்படி?

கேரட் துவையல்

சத்து நிறைந்த கேரட் துவையல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

 • Share this:
  கேரட்டில் உள்ள வைட்டமின் ‘ஏ’ கண்களுக்கு பலம் கொடுக்க கூடியது. விழித்திரைக்கு பலம் சேர்க்கும். கண்பார்வை நன்றாக இருக்கும். இது சருமத்துக்கு ஆரோக்கியத்தை தருகிறது. அத்தகைய இந்த கேரட்டில் துவையல் செய்தால் கேரட் பிடிக்காதவர்களும் விரும்பி உண்ணுவார்கள். இந்த கேரட் துவையலை 6 மாத குழந்தை முதல் வயதானவர்கள் வரை யார் வேண்டுமானாலும் உண்ணலாம்.

  தேவையான பொருட்கள்:

  கேரட் - 2 வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்),

  தக்காளி - 2 (நறுக்கவும்), தேங்காய்த் துருவல் - ஒரு கப்

  காய்ந்த மிளகாய் - 8

  கறிவேப்பிலை - சிறிதளவு

  கொத்தமல்லித்தழை - சிறிதளவு

  பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

  எண்ணெய், உப்பு - தேவையான அளவு

  தாளிக்க:

  கடுகு - ஒரு டீஸ்பூன்

  உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

  கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்.  மேலும் படிக்க...பாட்டி சொன்ன கருவாட்டு பிரியாணி .. கருவாட்டு பிரியர்களுக்கு ஒரு ட்ரீட்..

  செய்முறை:

  கேரட்டைத் தோல் சீவி துருவிக்கொள்ள வேண்டும் வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து நன்றாக சிவந்ததும் இத்துடன் வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும். அத்துடன் தக்காளி, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை, கொத்தமல்லி  என எல்லா பொருள்களையும் சேர்த்து நன்கு வதக்கி ஆறவிட வேண்டும், ஆறியபின் மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கெட்டியாக அரைக்க வேண்டும். இப்போது சுவையான கேரட் சட்னி ரெடி.

  குறிப்பு: குழந்தைகளுக்கு கொடுக்கும் போது காரம் சேர்க்காமல் செய்து கொடுக்க வேண்டும்.
  Published by:Vaijayanthi S
  First published: