ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கேப்சிகம் தேங்காய் சட்னி செய்ய ரெசிபி...

கேப்சிகம் தேங்காய் சட்னி செய்ய ரெசிபி...

கேப்சிகம் தேங்காய் சட்னி

கேப்சிகம் தேங்காய் சட்னி

capsicum coconut | குடைமிளகாயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதை தினசரி எடுத்து கொண்டால் பசியை குறைத்து எடை அதிகரிக்காமல் தடுக்கிறது. குடைமிளகாய் சட்னி செய்முறையை பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

குடைமிளகாயில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. குடைமிளகாய் சட்னி வித்தியாசமான சுவையுடன் இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்...

தேவையான பொருட்கள் 

குடைமிளகாய் - 2 பெரியது

பச்சை மிளகாய் - 4

உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

புளி - சிறிதளவு

சின்ன வெங்காயம் - 10

தேங்காய் சிறிய துண்டு - 1

எண்ணெய் - 2 ஸ்பூன்

உப்பு - சுவைக்கு

பெருங்காயத்தூள் - சிறிதளவு

கடுகு - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

குடைமிளகாய்

செய்முறை 

சின்ன வெங்காயம், குடைமிளகாயை நறுக்கி கொள்ளவும். வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பைப் போட்டு வறுத்து எடுக்கவும். அடுத்து அதில் பச்சை மிளகாய் போட்டு வதக்கிய பின்னர் தேங்காய், குடைமிளகாய், வெங்காயம் என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். இவை யாவும் வதங்கிய பிறகு புளி சேர்த்து வதக்கி ஆறவைக்கவும்.

Also see... இனி தேங்காய் சட்னியில் லெமன் ஜூஸ் சேர்த்து பாருங்கள்.... அட்டகாசமாக இருக்கும்...

அனைத்தும் ஆறியதும் மிக்சியில் உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்தால் சுவையான குடைமிளகாய் சட்னி ரெடி.

Also see... கிராமத்து ஸ்டைல் காரச் சட்னி...         

Published by:Vaijayanthi S
First published:

Tags: Capsicum recipes, Chutney