• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  •  ப்ரெட் போண்டா செய்வது எப்படி?

 ப்ரெட் போண்டா செய்வது எப்படி?

பிரெட் போண்டா. மாலை நேரத்தில் ஒருகப் டீயுடன் இந்த பிரெட் போண்டாவை சுவைப்பது மிகவும் அருமையாக இருக்கும்.

  • Share this:
    போண்டாக்களில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக உருளைக்கிழங்கு போண்டா, வெங்காய போண்டா, பிரெட் போண்டா, சீஸ் போண்டா, மற்றும் அரிசி மாவு போண்டா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது பிரெட் போண்டா. மாலை நேரத்தில் ஒரு கப் டீயுடன் இந்த பிரெட் போண்டாவை சுவைப்பது மிகவும் அருமையாக இருக்கும். வாங்க எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம்...

    தேவையான பொருட்கள்:

    ப்ரெட் ஸ்லைஸ் அல்லது துண்டுகள் - 12

    மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்

    கடுகு - அரை ஸ்பூன்

    சீரகம் - அரை ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    சமையல் எண்ணெய் - தேவையான அளவு

    பெரிய உருளைக் கிழங்கு - 2

    கோஸ் - 200 கிராம்

    பெரிய வெங்காயம் - 2



    செய்முறை:

    வெங்காயத்தை தோல் உரித்துப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கு, கோஸ் தேவைப்பட்டால்  உரித்தப் பூண்டு ஆகியவற்றையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
    பிரெட் துண்டுகளின் ஓரங்களை எல்லாம் முன்னமே கட் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.

    ஒரு வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அது நன்கு காய்ந்த பிறகு கடுகு, சீரகம் ஆகிய இவற்றை தாளித்து உடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு நன்கு வதக்கவும்.
    பச்சை வாசனை போகும் வரையில் தீய விடாமல் வறுத்த பிறகு எஞ்சி இருக்கும் முட்டைக் கோஸ், உருளை, உப்பு, மிளகுத் தூள் ஆகிய இவற்றை எல்லாம் சேர்த்து நன்கு வேகும் வரையில் தண்ணீரை ஊற்றாமல் அடுப்பை சிம்மில் வைத்துக் கிளற வேண்டும்.

    மேலும் படிக்க... வாழைக்காய் பச்சடி செஞ்சுருக்கீங்களா? இதோ ரெசிபி... ட்ரை பண்ணிருங்க...

    அதன் பின்னர் அத்துடன் தாளித்த கறிவேப்பிலையையும் சேர்த்து இறக்கவும். இது பார்க்க மசாலா போல இருக்கும். இப்போது ஓரங்கள் பிய்த்து ஏற்கனவே வைத்து இருக்கும் பிரெட் துண்டுகளை சிறிது தண்ணீரில் நனைத்து உள்ளங்கையில் வைத்துப் பிழியவும்.

    மேலும் படிக்க... சுவையான வடைகறி செய்வது எப்படி?

    பின்னர் பிரெட் துண்டுகளின் நடுவில் நீங்கள் வதக்கி வைத்து இருக்கும் மசாலாவை வைத்து நன்கு மூடி பந்து போல உருட்டவும். பிறகு நன்கு காய்ந்த எண்ணெய்யில் பொன்னிறமாக வரும் வரையில் நன்கு தீய விடாமல் பொரித்தெடுக்கவும். இதோ இப்போது சுவையான பிரெட் போண்டா தயார்.

    மேலும் படிக்க... உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு ரெசிபி...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: