தொற்றுநோய்களுக்கு எதிராக செயல்படும் அஸ்வகந்தா தேநீர்...

அஸ்வகந்தா தேநீர்

அமுக்கிரா கிழங்கு என்று அழைக்கப்படும் அஸ்வகந்தா நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படும். வைரஸ்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வலுப்படுத்த அஸ்வகந்தாவை தேநீராக தயாரித்து பருகலாம். இந்த தேநீர் உடல் எடையை குறைக்கவும் உதவும். 

  • Share this:
அமுக்கிரா கிழங்கு என்று அழைக்கப்படும் அஸ்வகந்தா நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படும். வைரஸ்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வலுப்படுத்த அஸ்வகந்தாவை தேநீராக தயாரித்து பருகலாம். இந்த தேநீர் உடல் எடையை குறைக்கவும் உதவும்.

தேவையான பொருட்கள்: 

அஸ்வகந்தா வேர் துண்டுகள்: 2

அஸ்வகந்தா தூள் - ஒரு டீஸ்பூன் ( தேவைப்பட்டால்)

தண்ணீர் - 1 டம்ளர்

எலுமிச்சை சாறு -  ஒரு டீஸ்பூன்

தேன் - ஒரு டீஸ்பூன்

மேலும் படிக்க... கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்... தட்டு வடை ரெசிபி...



செய்முறை: 

அகன்ற பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதிக்க தொடங்கியதும் ஒன்று அல்லது இரண்டு அஸ்வகந்தா வேர் துண்டுகளை போட்டு 10 நிமிடங்கள் வேகவிடவும். அல்லது ஒரு டீஸ்பூன் அஸ்வகந்தா தூளை போட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் கீழே இறக்கி  அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேன் கலந்து வடிகட்டி பருகலாம்.

இந்த தேநீரை காலை, மாலை இரு வேளை பருகலாம். இதில் சேர்க்கப்படும் மூன்று பொருட்களுமே நோய் எதிர்ப்பு சக்தியையும், ஆரோக்கியத்தையும் மேம்பட செய்துவிடும்.

மேலும் படிக்க... சூப்பரான ஈஸியான ஈவினிங் ஸ்நாக்ஸ்.. இதோ ரெசிபி..

அஸ்வகந்தா: மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்க உதவும். இது தவிர, நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும்.

எலுமிச்சை: இதில் இருக்கும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இது ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

தேன்: இதிலும் ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு கூறுகள் நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

மேலும் படிக்க... பீர்க்கங்காய் தோலில் துவையல் செய்யலாம் தெரியுமா?
Published by:Vaijayanthi S
First published: