Home /News /lifestyle /

அருமையான அப்பள கூட்டு செய்வது எப்படி?

அருமையான அப்பள கூட்டு செய்வது எப்படி?

இந்த அப்பளக்கூட்டு செய்வது மிகவும் சுலபம். இதனை ஒரு முறையாவது டிரை பண்ணிபாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் பிடிக்கும்.

காய்கறியில் கூட்டு செஞ்சுருப்பீங்க... ஆனால் அப்பளத்தில் கூட்டு செஞ்சு சாப்புட்டிருக்கீங்களா? வாங்க எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு – அரை கப்

பொரித்த அப்பளங்கள் – 6 லிருந்து 8

பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 2

தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

மிளகாய்தூள் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவைக்கு

இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

தாளிக்க

கடுகு – அரை டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வேகவிடுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். குக்கரில் பருப்பு, வெங்காயம், தக்காளி, நொறுக்கிய அப்பளம், தேங்காய்த் துருவல், மிளகாய்தூள், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து குக்கரை மூடுங்கள். 2 விசில் வந்ததும் இறக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, கூட்டில் சேருங்கள். இப்போது அப்பள குட்டு ரெடி...

மேலும் படிக்க... வாழைக்காய் பொடிமாஸ் செய்ய ரெசிபி!
Published by:Vaijayanthi S
First published:

Tags: Food

அடுத்த செய்தி