• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • விநாயகர் சதுர்த்திக்கு பூ போன்ற மென்மையான கொழுக்கட்டை செய்ய மாவு இந்த பதத்தில்தான் கிண்ட வேண்டும்..!

விநாயகர் சதுர்த்திக்கு பூ போன்ற மென்மையான கொழுக்கட்டை செய்ய மாவு இந்த பதத்தில்தான் கிண்ட வேண்டும்..!

பூரண கொழுக்கட்டை

பூரண கொழுக்கட்டை

கொழுக்கட்டை பதம் என்பது மாவு கிண்டுவதில்தான் இருக்கிறது. அது தவறானால் இறுகிவிடும் அல்லது வேக வைக்கும்போதே உடைந்து பூரணம் கரைந்துவிடும்.

  • Share this:
விநாயகருக்கு உகர்ந்த பிடி கொழுக்கட்டை இருந்தால்தான் அந்த படையல் முழுமையடையும். ஆனால் சிலருக்கு அதை லாவகமாக செய்யும் பதம் தெரியாது. அதன் பதம் என்பது மாவு கிண்டுவதில்தான் இருக்கிறது. அது தவறானால் இறுகிவிடும் அல்லது வேக வைக்கும்போதே உடைந்து பூரணம் கரைந்துவிடும். எனவே இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க மாவை எப்படி கிண்டுவது, பூ போன்ற கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1கப்
வெல்லம் -
தேங்காய்
நெய் - 2 ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
உப்பு - 1 சிட்டிகை



செய்முறை :

கடாயில் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்கள். அதில் 1 ஸ்பூன் நெய் விட்டு , உப்பு கிளறுங்கள்.

உப்பு கரைந்ததும் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறுங்கள். அரிசி மாவு சேர்க்கும்போது கிண்டுவதை நிறுத்தாதீர்கள். இல்லையெனில் மாவு சீராக கரையாமல் சிறு சிறு மாவு உருண்டைகளாக ஆகிவிடும். வேண்டிமெனில் கிண்டுவதற்கு வீட்டில் ஒருவரை துணைக்கு வைத்துக்கொள்ளுங்கள்.அடுப்பை சிறு தீயில் வைக்கவும்.

மாவு முற்றிலும் கிண்டியதும் , தண்ணீர் அதிகம் வற்றாமல் கொஞ்சம் தண்ணீர் பதம் இருக்கும்போதே அடுப்பை அணைத்துவிடுங்கள். இல்லையெயில் வெந்ததும் மாவு இறுகிவிடும்.

அடுப்பிலிருந்து இறக்கியதும் ஆற வையுங்கள். பின் அதன் சூடு தணிந்ததும் மீண்டும் கைகளால் நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.

விநாயகர் சதுர்த்தி 2021 எப்போது, பூஜைக்கான சரியான நேரம் இதோ!

அடுத்ததாக பூரணம் தயாரிக்க கடாயில் வெல்லத்தை உடைத்துப் போட்டு அரை கிளாஸ் தண்ணீர் விட்டு கொதிக்க விடுங்கள்.

வெல்லம் உறுகியதும் வடிகட்டிக்கொள்ளுங்கள். பின் வெல்லப் பாகுவை மீண்டும் கடாயில் ஊற்றி கிளறுங்கள். அதில் தற்போது துருவி தேங்காயை சேர்த்துக்கொள்ளுங்கள். நெய் சேர்த்துக்கொள்ளுங்கள். தண்ணீர் இறுகி பூரண பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். தற்போது பிசைந்த மாவை சிறு உருண்டையாக எடுத்துக்கொள்ளுங்கள்.



பின் சிறிய வாழை இலையில் எண்ணெய் தடவி அதில் மாவை வடை போல் தட்டி அதன் நடுவே ஒரு ஸ்பூன் பூரணம் வைத்து அப்படியே மடித்துவிட்டு ஓட்டைகளின்றி மூடி விடுங்கள்.

உருண்டையாக வேண்டுமெனில் உருட்டி அதன் நடுவே குழி செய்து பின் பூரணம் வைத்து மூட வேண்டும். இப்போது பல வடிவங்களில் கொழுக்கட்டை அச்சு விற்கப்படுகிறது அவற்றை வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.

உருட்டிய உருண்டைகளை இட்லி தட்டில் நெய் அல்லது எண்ணெய் தடவி வையுங்கள். பின் இட்லி குண்டானில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் தட்டுகளை அடுக்கி மூடி விடுங்கள்.

15 நிமிடங்கள் கழித்து திறக்க பூரண கொழுக்கட்டை பூ போல் வெந்திருக்கும். விநாயகருக்கு எடுத்து படையல் வைக்கலாம்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: