மாலையில் டீ குடிக்கும்போது சுட சுட ஆனியன் பக்கோடா சாப்பிட்டால் அதை விட சுவை மிகுந்த நேரம் இருக்க முடியாது. அப்படி வீட்டில் நீங்களும் ஆனியன் பக்கோடா செய்ய நினைத்து அப்போது வீட்டில் கடலை மாவு இல்லை அல்லது வித்தியாசமான முறையில் பக்கோடா செய்து பார்க்க வேண்டும் எனில் கோதுமை மாவில் ஆனியன் பக்கோடா செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்
பச்சை மிளகாய் -2
பூண்டு பற்கள் - 4
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தே.அ
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
செய்முறை :
பொட்டுக்கடலை மாவு இல்லையெபில் வீட்டிலேயே அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அதனுடன் கோதுமை மாவை கலந்துகொள்ளுங்கள். பின் அதில் பச்சை மிளகாய் , நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகாய் தூள் ,பெருங்காயத்தூள் என அனைத்தையும் சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள்.
பின் கொஞ்சமாக அதன் மேல் தண்ணீர் தெளித்து மீண்டும் பிசையுங்கள். மாவு கெட்டிப்பதத்தில் இருக்க வேண்டும். எனவே தண்ணீரை அதிகம் சேர்க்க வேண்டாம்.
கொஞ்சமாக வாயில் மாவை வைத்து உப்பு அளவை பார்த்துக்கொள்ளுங்கள்.
உணவின் சுவையை கூட்ட சேர்க்கப்படும் செயற்கை பொருட்களால் வரும் ஆபத்து பற்றி தெரியுமா..?
இப்போது கடாய் வைத்து எண்ணெய் தேவையான அளவு ஊற்றி காய வையுங்கள். கைகளை மேலே வைத்தால் சூட்டில் அனல் படும். அவ்வாறு இருந்தால் மாவு காய்ந்துவிட்டதாக அர்த்தம்.
இப்போது அடுப்பை சிறு தீயில் வைத்து மாவை பிசைந்து உதிரிரியாக பக்கோடா போல் தூவவும். பின் அடுப்பை சற்று தீ அதிகமாக்கி கரண்டியால் வறுக்க செய்யுங்கள்.
பொன்னிறமாக வந்ததும் பகோடாவை எடுத்துவிடுங்கள். இப்படி அனைத்து மாவையும் சுட்டு எடுத்துவிட்டு இறுதியாக கறிவேப்பிலையை கொஞ்சம் எடுத்து அதே எண்ணெயில் வறுத்து பக்கோடா மேல் கொட்டுங்கள். வாசனை கமகமவென வரும்.
அவ்வளவுதான் கோதுமை மாவில் ஆனியன் பக்கோடா தயார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.