முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ருசியான கோதுமை மாவு குலோப் ஜாமூன் செய்யலாமா?

ருசியான கோதுமை மாவு குலோப் ஜாமூன் செய்யலாமா?

கோதுமை மாவு பயன்படுத்தி சூப்பரான குலாப் ஜாமூன் செய்வோமா?

கோதுமை மாவு பயன்படுத்தி சூப்பரான குலாப் ஜாமூன் செய்வோமா?

வெறும் ஒரு கப் கோதுமை மாவு இருந்தால் போதும். 30 நிமிடத்தில் ஆரோக்கியமான கோதுமை குலோப் ஜாமுன் தயார் செய்யலாம். இதோ உங்களுக்கான ரெசிபி…

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயல்பாக நாம் மைதா மாவில் தான் குலோப் ஜாமூன் செய்து பார்த்திருப்போம். உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் மைதாவிற்கு பதில் கோதுமை மாவை பயன்படுத்தி குலோப் ஜாமூன் செய்வது எப்படி என இந்த பதிவில் நாம் காணலாம்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 1 கப்.

நெய் – 6 ஸ்பூன்.

பேக்கிங் சோடா – 1/2 ஸ்பூன்.

பால் பவுடர் – 4 ஸ்பூன்.

பால் – 1/4 கப்.

சர்க்கரை – 1 கப்.

ஏலக்காய் – 3.

ஆரஞ்ச் கலர் – 1 சிட்டிகை.

எண்ணெய் – கால் லிட்டர்.

செய்முறை :

குலோப் ஜாமூன் செய்வதற்கு முன்னதாக, ஜாமூன் செய்ய எடுத்துக்கொண்ட கோதுமை மாவினை சல்லடையில் சலித்து தூசி நீக்கி சுத்தம் செய்து வைக்கவும். அதே நேரம் ஜாமூன் செய்ய தேவையான பொருட்கள் அனைத்தும் தயார் செய்துக்கொள்ளவும்.

தற்போது, கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடேற்றவும். நெய் உறுகியதும் இதில் ஒரு கப் கோதுமை மாவு சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும். 2 நிமிடங்கள் கழித்து மீண்டும் 2 ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து, தனியாக ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.

Also Read | கோடை வெயிலுக்கு இதம் தரும் பானகம்.. இதோ ரெசிபி..!

இப்போது, இந்த கோதுமை மாவு உள்ள பாத்திரத்தில், பால் பவுடர், பேக்கிங் சோடா, 2 ஸ்பூன் நெய், கால் கப் பால் சேர்த்து, மாவினை ஒரு பெரிய உருண்டையாக பிசைந்து, 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

இதனிடையே கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து, எண்ணெய் சேர்த்து சூடேற்றவும். எண்ணெய் நன்கு கொதிக்கும் நிலையில் இதில், கோதுமை மாவினை சிறு சிறு உருண்டையாக பிடித்து எண்ணெயிலிட்டு, பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

தற்போது சர்க்கரை பாகு தயார் செய்ய, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து சூடு படுத்தவும். சர்க்கரை உறுகி சர்க்கரை பாகு தயார் ஆனதும் இதில் ஆரஞ்ச் கலர் மற்றும் ஏலக்காயினை தட்டி சேர்த்துக்கொள்ளவும்.

இதையடுத்து, தயாரான சர்க்கரை பாகில், பொன்னிறமாக வறுத்து வைத்த ஜாமூன் உருண்டைகளை சேர்த்து ஊற வைக்கவும். ஒரு 2 மணிநேரம் அப்படியே வைத்தால் சுவையான ‘கோதுமை குலோப் ஜாமூன்’ தயார்.

இனிப்பு சுவை கொண்ட இந்த கோதுமை குலோப் ஜாமூன், உணவிற்கு பின்னர் பரிமாறுவதற்கு ஏற்ற இனிப்பு ஆகும். ஒரு கோப்பையில் சிறிதளவு சர்க்கரை பாகுடன் சேர்த்து இந்த ஜாமுனை வைத்து பரிமாறலாம். மைதா குலோப் ஜாமூனை விட இது ஆரோக்கியமானது.

First published:

Tags: Food recipes, Health Benefits, Health tips, Healthy Food