காலை உணவை ஆரோக்கியமாக்க சம்பா கோதுமை ரவையில் வெண் பொங்கல்

சர்க்கரை நோயாளிகளுக்கும் இது நல்ல காலை உணவு.

காலை உணவை ஆரோக்கியமாக்க சம்பா கோதுமை ரவையில் வெண் பொங்கல்
வெண் பொங்கல்
  • Share this:
கோதுமையை உடைத்து தயாரிக்கப்படும் இந்த சம்பா கோதுமை ரவையில் பொங்கல் செய்து சாப்பிட்டுப் பாருங்கள் சுவை மட்டுமல்ல ஆரோக்கியமும் நிறைந்தது. சர்க்கரை நோயாளிகளுக்கும் இது நல்ல காலை உணவு.

தேவையான பொருட்கள் :

எண்ணெய் - 4 tsp


சம்பா கோதுமை ரவை - 3/4 கப்
பாசி பருப்பு - 1/4 கப்
உப்பு - தே.அபெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
தண்ணீர் - 2 1/2 கப்

தாளிக்க :

எண்ணெய் - 2 tsp
நெய் /வெண்ணெய் - 3 tsp
மிளகு - 1 tsp
சீரகம் - 1 tsp
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
முந்திரி - 6



செய்முறை :

பாசி பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளுங்கள். பின் குக்கரில் 3/4 தண்ணீர் ஊற்றி 2 விசில் வர வேக வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கோதுமை ரவையை வறுத்துக்கொள்ளுங்கள். சற்று வாசனை வரும் அப்போது வேக வைத்த பாசி பருப்புடன் ரவையை சேர்த்து கிளறுங்கள்.

புதினா ரசம் வெச்சு சாப்பிட்டிருக்கீங்களா...? இன்னைக்கே செஞ்சு பாருங்க..!

பின் 2 1/2 கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். குக்கரை மூடி விடுங்கள். 2-3 விசில் வரும் வரைக் காத்திருங்கள்.

விசில் வந்ததும் குக்கரை திறந்து சூடு பதத்திலேயே கிளறுங்கள். அடுத்ததாக தாளிக்கக் கொடுக்கப் பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து பொங்கலில் கொட்டி கிளறுங்கள்.

அவ்வளவுதான் சம்பா கோதுமை ரவை வெண் பொங்கல் தயார்.
First published: July 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading