ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உடல் எடை குறையணுமா? வீட்டிலேயே ரெடி பண்ணுங்க ’பட்டர் காபி’..!

உடல் எடை குறையணுமா? வீட்டிலேயே ரெடி பண்ணுங்க ’பட்டர் காபி’..!

பட்டர் காபி

பட்டர் காபி

Butter Coffee | பட்டர் காபியை குடிப்பதால், குடல் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கிறது. இதில் உள்ள வெண்ணெய் குடலின் அமிலத்தன்மை, வீக்கம் ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம்மில் பலருக்கு காலையில் எழுந்தவுடன் காபி குடித்தால் தான் நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருக்க முடியும் என்ற எண்ணம் தோன்றும். குறிப்பாக அலுவலக வேலையில் இருக்கும் போது ஏற்படும் போது மன அழுத்தத்தைப் போக்கவும், தூக்கத்தைக் கட்டுப்படுத்தவும் காபியை அதிகளவில் குடிப்பதை வ்ழக்கமாக வைத்துள்ளோம். அப்படி அடிக்கடி குடிக்கும் காபியால் எடைக் குறைந்தால் எப்படி இருக்கும். எடை இழப்புக்கு உதவும் பட்டர் காபியை எப்படி போடுவது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

தண்ணீர் - 1 கப்

தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

இலவங்கப்பட்டை தூள் - 1/2 பிஞ்ச்

வெண்ணெய் - 1 டீஸ்பூன்

காபி - 1/2 டீஸ்பூன்

Also read... சுவையான பில்டர் காபி போட சில டிப்ஸ்!

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் காபி தூள் சேர்த்து கொதி நிலைக்கு வரும் வரை சூடாக்கவும்.
2. பின்னர் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் தேங்காய் எண்ணெய், வெண்ணெய், ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள் மற்றும் காய்ச்சி வைத்த காபி தண்ணீர் ஆகியவற்றை சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக கலக்க நீங்கள் ஒரு பிளெண்டரை பயன்படுத்த வேண்டும். பிளெண்டர் இல்லையெனில் நீங்கள் மிக்சியையும் பயன்படுத்தலாம்.
3. இந்த கலவை மிருதுவாகும் வரை சுமார் 3 முதல் 4 நிமிடங்கள் பிளெண்டரில் கலக்க வேண்டும். இப்போது காபி அதிக நுரை மற்றும் கிரீம் பதம் கொண்டதாக இருப்பதைக் நீங்கள் காணலாம்.
4. அவ்வளவுதான் உங்கள் பட்டர் காபியை 10 நிமிடங்களில் தயார் செய்து விடலாம். இதனை ஒரு கிளாஸிற்கு மாற்றி பறிமாறலாம்.
5. இந்த பட்டர் காபி பொதுவாக எந்த இனிப்புகளும் சேர்க்கப்படாமல் போடலாம்
6. விரும்பினால், தேவையான சுவைக்கு ஏற்ப சிறிது சர்க்கரை, வெல்லம் அல்லது தேன் போன்ற எந்த ஒரு இனிப்பான்களையும் சேர்க்கலாம். 
First published:

Tags: Butter, Coffee