’தர்பூசணி தோல் சட்னி ‘ எப்படி செய்வது தெரியுமா..?

நீர்ச்சத்து மிக்க தர்பூசணியின் சதையை மட்டும் சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எரிந்துவிடுவோம். ஆனால் அந்த தோலை வைத்து அருமையான சுவையில் சட்னி செய்யலாம்.

’தர்பூசணி தோல் சட்னி ‘ எப்படி செய்வது தெரியுமா..?
தர்பூசணி தோல் சட்னி
  • Share this:
நீர்ச்சத்து மிக்க தர்பூசணியின் சதையை மட்டும் சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எரிந்துவிடுவோம். ஆனால் அந்த தோலை வைத்து அருமையான சுவையில் சட்னி செய்யலாம். எப்படி தெரியுமா..?

தேவையான பொருட்கள் :

தர்பூசணி தோல் - 1 கப்


எண்ணெய் - 2 tsp
சீரகம் - 1 tsp
இஞ்சி - 2 துண்டுகாய்ந்த மிளகாய் - 3
உப்பு - தே.அ
புளி - சிறிதளவு
தேங்காய் - 3 ஸ்பூன்

தாளிக்க :

எண்ணெய் - 1 ஸ்பூம்
கடுகு - 1/2 tsp
கறிவேப்பிலை - சிறிதளவுசெய்முறை :

தர்பூசணி சதை நீக்கி தோலை துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பின்புற தோலை சீவிக்கொள்ளவும்.

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம் , இஞ்சி , காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் தர்பூசணி தோலை கொட்டி வேக வைக்கவும். தோல் சுருங்கும் வரை தட்டு போட்டு மூடி வேக வையுங்கள்.

நூடுல்ஸில் பாயாசம் செய்து ருசித்துள்ளீர்களா..? இதோ ரெசிபி..!

இறுதியாக உப்பு, புளி, தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி 2 நிமிடங்கள் பிரட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த கலவையின் சூடு தணிந்ததும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள். பின் மற்றொரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளுங்கள். உப்பு சரி பார்க்கவும்.

இறுதியாக தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டுங்கள்.

அவ்வளவுதான் தர்பூசணி தோல் சட்னி தயார்.

 

 

 

 
First published: June 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading