ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

விநாயகருக்குப் பிடித்த வெள்ளைக் கொழுக்கட்டை எப்படி செய்வது..?

விநாயகருக்குப் பிடித்த வெள்ளைக் கொழுக்கட்டை எப்படி செய்வது..?

வெள்ளைக் கொழுக்கட்டை

வெள்ளைக் கொழுக்கட்டை

விநாயகருக்கு வெள்ளைக் கொழுக்கட்டை என்பதே பிரதான நெய்வேத்தியம் ஆகும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டைதான் முதல் நெய்வேத்தியமாக அளிக்கப்படும். அந்த வகையில் வெள்ளைக் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

அரிசி மாவு - 1கப்

எண்ணெய் - 1 tsp

வெல்லம் - 1 கப்

தேங்காய் - 1 கப்

ஏலக்காய் பொடி - 1/4 tsp

நெய் - 1 tsp

செய்முறை : 

முதலில் கடாய் வைத்து தண்ணீர் 1 1/4 கப் ஊற்றி அதில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய விடுங்கள். பின் அது கொதிநிலையை அடையும்போது அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கையில் கொட்டிக்கொண்டே மறு கையில் கிண்டுங்கள். அப்போதுதான் கட்டிகளின்றி மாவு கிடைக்கும்.

தண்ணீர் இறுகி உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு காற்றாட விடுங்கள்.

பின் கைகளால் பிசைந்துகொள்ளுங்கள். அதை தனியாக வைத்துவிட்டு பூரணம் தயார் செய்ய கடாய் வைத்து அரை கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் சேர்த்து உருக வையுங்கள்.

அங்கன்வாடி சத்துமாவில் புட்டு செஞ்சு சாப்பிட்டா ருசியாகவும் இருக்கும்...ஆரோக்கியமாகவும் இருக்கும்

வெல்லம் நன்கு கரைந்து உருகியதும் துருவிய தேங்காய் மற்றும் நெய் சேர்த்து கிளறுங்கள். இரண்டும் கெட்டியான பூரணம் பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு காற்றாட விடுங்கள்.

தற்போது கைகளால் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி அதில் கொஞ்சம் கொஞ்சமாக பூரணம் வைத்து மூடுங்கள்.  இவ்வாறு ஒவ்வொன்றாக செய்து வைத்து பின் இட்லி குக்கர் தட்டில் துணி விரித்து அதன் மேல் ஒவ்வொரு உருண்டைகளாக வைத்து இட்லி மூடி போட்டு மூடி விடுங்கள்.

10 -15 நிமிடங்கள் வேக விடுங்கள். பின் திறந்து கைகளை தொட்டுப்பார்க்க மாவு கைகளில் ஒட்டாமல் இருந்தால் கொழுக்கட்டை வெந்துவிட்டது.

அவ்வளவுதான் வெள்ளைக் கொழுக்கட்டை தயார்.

First published:

Tags: Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி