வெயில் காலத்தில் ஜில்லென இருக்கும் வெர்ஜின் மொஜிடோ : வீட்டிலேயே செய்ய டிப்ஸ்..!

வெர்ஜின் மொஜிடோ | Virgin mojito

வெர்ஜின் மொஜிடோ பல சாட் கடைகளில் மிகவும் ஃபேமஸ். எத்தனை சாட் வகைகளை சாப்பிட்டாலும் இறுதியாக இந்த மொஜிடோவை குடித்தால்தான் திருப்தியாக இருக்கும்.

 • Share this:
  வெர்ஜின் மொஜிடோ பல சாட் கடைகளில் மிகவும் ஃபேமஸ். எத்தனை சாட் வகைகளை சாப்பிட்டாலும் இறுதியாக இந்த மொஜிடோவை குடித்தால்தான் திருப்தியாக இருக்கும். இதை பெரிய பெரிய பெரிய ரெஸ்டாரண்டுகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வார்கள். குறிப்பாக வெயில் காலங்களில் இதன் டிமாண்ட் அதிகமாகவே இருக்கும். எனவே இதை அதிக விலை கொடுத்து வெளியே குடிக்காமல் வீட்டிலேயே தயாரிக்க எளிமையான டிப்ஸ் இதோ....

  தேவையான பொருட்கள்

  எலுமிச்சை பழம் -1
  சர்க்கரை - சுவைக்கு ஏற்ப
  உப்பு - 1 சிட்டிகை
  புதினா - 4 இலைகள்
  பெப்பர் மிண்ட் போலோ மிட்டாய் - 1 ( தூள் செய்து கொள்ளுங்கள் )
  சோடா அல்லத்ய் ஸ்பிரைட்  செய்முறை :

  எலுமிச்சையை இரண்டாக நறுக்கிக்கொள்ளுங்கள். அதில் ஒரு பாதியை கிளாஸில் பிழிந்துகொள்ளுங்கள். மற்றதை இரண்டு துண்டுகளாக நறுக்கி அதில் போடுங்கள்.

  பின் புதினா இலைகளை சேருங்கள். அதோடு சர்க்கரை, உப்பு, பெப்பர் மிண்ட் போலோ தூள் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  ஓவன் இல்லாமல் வீட்டிலேயே ஈஸியாக தந்தூரி நாண் செய்யலாம் - எப்படி தெரியுமா?

  தற்போது அதை கட்டை அல்லது பருப்பு கடையும் மத்தின் கைப்பிடியால் இடித்துக்கொள்ளுங்கள். அப்போது புதினா மற்றும் நறுக்கிப்போட்ட எலுமிச்சை சாறு வெளியேறி சுவை தரும்.

  பின் அதில் சோடா அல்லது ஸ்பிரைட் ஊற்றி ஒரு ஸ்பூன் கொண்டு கலந்துவிடுங்கள்.

  அவ்வளவுதான் வெர்ஜின் மொஜிடோ தயார்.

   
  Published by:Sivaranjani E
  First published: