• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • செட்டிநாடு சுவையில் வெங்காய கோஸ் : இதுவரைக்கும் சாப்பிட்டதில்லையா..? இன்றே டிரை பண்ணுங்க

செட்டிநாடு சுவையில் வெங்காய கோஸ் : இதுவரைக்கும் சாப்பிட்டதில்லையா..? இன்றே டிரை பண்ணுங்க

வெங்காய கோஸ்

வெங்காய கோஸ்

இதை இட்லி , தோசைக்கு சாப்பிடலாம். சாதத்திற்கும் சாப்பிடலாம்.

  • Share this:
    செட்டிநாடு வெங்காய கோஸ் மிகவும் ஸ்பைசியான ஒரு உணவு. இதை இட்லி , தோசைக்கு சாப்பிடலாம். சாதத்திற்கும் சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 1
    தக்காளி -1
    கருவேப்பிலை - சிறிதளவு
    நல்லெண்ணெய் - 1/2 tbsp
    சோம்பு - 1/2 tsp
    மஞ்சள் பொடி - 1 /2 tsp
    உப்பு - தே.அ
    காய்ந்த மிளகாய் - 5
    தேங்காய் - 1/4 கப்
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை :

    குழம்பு வைப்பதற்கு முன் அதற்கு ஸ்பெஷல் பேஸ்ட் தயாரித்துக்கொள்ள வேண்டும். அதற்கு கடாயை அடுப்பில் வைத்து அதில் காய்ந்த மிளகாய் , சோம்பு ஆகிவற்ரை சேர்த்து சூடேற வறுத்துக்கொள்ளுங்கள்.

    பின் அதன் சூடு தணிந்ததும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள். அதோடு துருவிய தேங்காயும் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். பேஸ்ட் ரெடி.

    சுவாச பிரச்சனையா? அப்போ இந்த அல்வா செய்து சாப்பிடுங்க!

    அடுத்ததாக கடாய் வைத்து சூடேறியதும் நல்லெண்ணெய் விடுங்கள். காய்ந்ததும் சோம்பு சேர்த்து பொறிக்க விடுங்கள்.

    அடுத்ததாக வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் தக்காளிம் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்குங்கள்.

    தக்காளி சுருங்க வதங்கி கூழ் போல் ஆனதும் 1 கப் தண்ணீர் ஊற்றுங்கள். பின் அரைத்த பேஸ்டை சேர்த்து கலந்துவிட்டு உப்பு சரி பாருங்கள்.

    பின் தட்டுபோட்டு மூடி 3-4 நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள். நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லி தழை தூவி பரிமாறுங்கள்.

    அவ்வளவுதான் வெங்காய கோஸ் தயார்.

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: