• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் குழம்பு..! புதிய சுவையில் சிம்பிளான ரெசிபி

வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் குழம்பு..! புதிய சுவையில் சிம்பிளான ரெசிபி

வெள்ளரிக்காய் குழம்பு..!

வெள்ளரிக்காய் குழம்பு..!

வெள்ளரிக்காய் வெயிலுக்கு உகந்தது. அதேசமயம் இது பருவக்கால காய் என்பதால் தற்போது எளிதாகக் கிடைக்ககூடியது

  • Share this:
    வெள்ளரிக்காய் வெயிலுக்கு உகந்தது. அதேசமயம் இது பருவக்கால காய் என்பதால் தற்போது எளிதாகக் கிடைக்ககூடியது. இதை வைத்து காரக்குழம்பு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    வெள்ளரிக்காய் 1
    புளி தண்ணீர் - 1 கப்
    வெல்லம் - 1 tsp
    மஞ்சள் - 1/2 tsp
    உப்பு - தே. அளவு
    எண்ணெய் - தே.அளவு

    அரைக்க :

    வெந்தையம் - 1 tsp
    உளுத்தம்பருப்பு - 1 tsp
    கடலை பருப்பு - 1 tsp
    தேங்காய் துருவியது - 4 tsp
    சீரகம் - 1 tsp
    காய்ந்த மிளகாய் - 3
    கருவேப்பிலை - 1 ஸ்பிரிங்
    பூண்டு - 2 பற்கள்

    தாளிக்க :

    எண்ணெய் - 1 tsp
    கடுகு - 1 tsp
    உளுத்தம்பருப்பு - 1 tsp
    கருவேப்பிலை - சிறிதளவு



     

    செய்முறை :

    வெள்ளரிக்காயை தோலை நீக்கிக்கொள்ளுங்கள். குக்கரில் போட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் வைத்து 1 விசில் வர வேக வைக்கவும். வெந்ததும் தனியாக வைத்துவிடுங்கள்.

    தற்போது கடாயை அடுப்பில் வைத்து அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 2 நிமிடங்களுக்கு வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள். பச்சை வாசனை போக வேண்டும். பின் காற்றாட விட்டு மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    ரோட்டுக்கடை காளான் ரொம்ப மிஸ் பன்றீங்களா..? வீட்டிலேயே செய்ய இதோ ரெசிபி..!

    தற்போது கடாய் வைத்து புளித்தண்ணீர் ஊற்றி அதில் அரத்த பேஸ்டை சேர்த்து கொதிக்கவிடுங்கள். மஞ்சள் , உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

    நன்கு கொதித்ததும் வேக வைத்துள்ள வெள்ளரியை தண்ணீரோடு சேர்த்துக்கொளுங்கள். வெல்லம் சேர்த்துக்கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் சிறு தீயில் வைத்து கொதிக்க வையுங்கள்.

    கொதிநிலை முடிந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். அடுத்ததாக தாளிக்க கடாய் வைத்து எண்ணெய், கடுகு என சேர்த்து தாளித்து குழம்பில் ஊற்றவும்.

    அவ்வளவுதான் வெள்ளரிக்காய் குழம்பு தயார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    பார்க்க :

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: